மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 ஆக 2021

மாதம் ஒன்றென நான்கு படமும் ரிலீஸ்: சூர்யாவின் திட்டம் !

மாதம் ஒன்றென நான்கு படமும் ரிலீஸ்: சூர்யாவின்  திட்டம் !

கொரோனா அச்சுறுத்தல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பெரிய பட்ஜெட் படமெல்லாம் திரையரங்க ரிலீஸூக்காக காத்திருந்தது. ஆனால், முதல் ஆளாகப் பெரிய பட்ஜெட் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டு அசத்தினார் சூர்யா. சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தின் ஹிட்டுக்குப் பிறகுதான், பெரிய பட்ஜெட் படங்களெல்லாம் நம்பிக்கையுடன் ஓடிடியில் அடுத்தடுத்து வெளியானது.

சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘ஜெகமே தந்திரம்’ படம் வரை ஓடிடியில் ரிலீஸாக காரணம் ‘சூரரைப் போற்று’ ஓடிடி முடிவு தான்.

பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று என அனைத்துப் படங்களையும் ஓடிடியில் வெளியிடுவதால் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துவந்தாலும், இப்போதைய சூழலில் ஓடிடியை திட்டமாக நம்புகிறார் சூர்யா. அப்படி, அடுத்தடுத்து நான்கு படங்களை மாதம் ஒன்றாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட இருக்கிறார் தயாரிப்பாளர் சூர்யா.

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் நான்கு படங்கள் உருவாகி வருகிறது. அப்படங்களை பிரைம் ஓடிடியில் வெளியிடுவதற்கான ஓப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, ஜெய்பீம், உடன்பிறப்பே, ஓ மை டாக் மற்றும் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படங்கள் வெளியாக இருக்கிறது.

செப்டம்பர் ரிலீஸாக காமெடி டிராமா ஜானரில் ரம்யா பாண்டியன், வாணிபோஜன் , மிதுன் மாணிக்கம் நடிக்க ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ படம் வெளியாக இருக்கிறது.

ஆக்டோபர் மாத ரிலீஸாக ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் நடிக்க உருவாகியிருக்கும் ‘உடன்பிறப்பே’ படம் வெளியாக இருக்கிறது.

நவம்பர் மாத ரிலீஸாக த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், ரஜிஷா விஜயன், லிஜிமோல் ஜோஸ் , பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெய்பீம்’ படம் வெளியாக இருக்கிறது.

டிசம்பர் மாத ரிலீஸாக அருண்விஜய், அவரின் மகன் ஆர்னவ் விஜய், தந்தை விஜய்குமார், மற்றும் மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள’ஓ மை டாக்’எனும் படம் வெளியாக இருக்கிறது.

- ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

வெள்ளி 6 ஆக 2021