மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 ஆக 2021

நிபந்தனைகளுடன் தொடங்கிய சிம்பு பட படப்பிடிப்பு!

நிபந்தனைகளுடன் தொடங்கிய சிம்பு பட படப்பிடிப்பு!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 6) தொடங்குகிறது.

முதலில், இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கத் தடை இருந்தது, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்,சிலம்பரசனால் 20 ரூபாய் கோடி இழப்பு ஏற்பட்டதற்குச் சிம்பு பதில் சொல்லவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்தப் புகார் குறித்து விசாரிக்க வேண்டும், அதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு காணும் வரை சிம்பு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவேண்டாம் என தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திடம் சொல்ல ,அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

அதோடு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷை படக் குழுவினரைத் தொடர்புகொண்டு இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வரை உங்கள் படப்பிடிப்பில் பங்கேற்கமாட்டோம் என்றும் சொல்லியிருந்தார்கள்.

இச்சிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி ஆகஸ்ட் 2 காலை 11.30 மணிக்குப் பேச்சுவார்த்தை நடந்தது.

அப்பேச்சுவார்த்தையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் சிம்பு சார்பாக அவருடைய அம்மா உஷா ராஜேந்தர் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் சிக்கல்கள் குறித்து உஷா ராஜேந்தரிடம் எடுத்துச் சொல்லப்பட்டதாம். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அவர், வீட்டுக்குப் போய் சிம்புவிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்று வழக்கம்போல சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

அவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கும்வரை சிம்பு படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்கிற முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று பெப்சி முடிவில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு சிலம்பரசன் தரப்பிலிருந்து முறையான பதில் இல்லையென்றபோதும், சிலம்பரசன் படப்பிடிப்பில் கலந்துகொள்வது எனத் தொழிலாளர்கள் சம்மேளனம் முடிவு செய்து இருக்கிறது

இந்தத்தகவல் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்,தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணியைத் தொடர்புகொண்டு இதுகுறித்துக் கேட்டபோது, அவர்கள் படப்பிடிப்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்கள், எனவே நான்கைந்து நாட்கள் படப்பிடிப்பு நடக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆர்.கே.செல்வமணியின் திடீர் மனமாற்றத்துக்குக் காரணம், சிலம்பரசன் படத்தின் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் என்பதுதானாம். ஐசரிகணேஷ் தனிப்பட்ட முறையில் ஆர்.கே.செல்வமணிக்குச் சில சலுகைகள் வழங்கியதால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டது என தயாரிப்பாளர்கள் மத்தியில் பேச்சு கிளம்பியுள்ளது.

உண்மை நிலவரம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் விசாரித்தபோது, ”தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதியோடுதான் சிலம்பரசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் இன்று பங்கேற்கின்றனர். தயாரிப்பாளர் ஐசரிகணேஷ், சங்கத்திற்கு சில உத்தரவாதத்தைக் கடிதமாகக் கொடுத்துப் படப்பிடிப்பை நடத்த அனுமதிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். அதன் அடிப்படையில் திருப்பதி பிரதர்ஸ், போஸ் லிங்குசாமிக்கு சிலம்பரசன் கொடுக்க வேண்டிய 1 கோடி ரூபாய் உடனடியாக கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு தயாரிப்பாளருக்கு 50 லட்ச ரூபாய் செட்டில்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது

மைக்கேல் ராயப்பன், தேனாண்டாள் பிலிம்ஸ், ஆகியோர் சம்பந்தப்பட்ட நிதிசார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்ட பின்னரே இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்குச் செல்வோம் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறுதிமொழி கடிதம் கொடுத்திருக்கிறார். அவரது வேண்டுகோளை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இன்று முதல் சிலம்பரசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது” என்றனர்.

-இராமானுஜம்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வெள்ளி 6 ஆக 2021