மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

ஆறு முதல் அறுபது வரை: கூகுள் குட்டப்பாவின் கணக்கு!

ஆறு முதல் அறுபது  வரை: கூகுள் குட்டப்பாவின் கணக்கு!

பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் சொந்தப் பட நிறுவனமான ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம் ‘தெனாலி’. கமல்ஹாசன், ஜோதிகா, தேவயானி, ஜெயராம், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்த அந்தப்படத்தில் இலங்கை தமிழ் பேசி கமல்ஹாசன் நடித்திருந்தார்.

அந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதன்பின் திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்திய கே.எஸ்.ரவிக்குமார், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’.

இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் ‘பிக்பாஸ்’ பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா மற்றும் யோகி பாபு, பூவையர், மனோபாலா, மாரிமுத்து, ‘பிளாக்’ பாண்டி, ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், நடிகை பவித்ரா லோகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர்களாக சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் ஆகிய இரட்டை இயக்குநர்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளர்களாகப் பணியாற்றியவர்கள்.

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முதல் பார்வையை நடிகர் சூர்யா ஆகஸ்ட் 3 அன்று மாலை ஆறு மணி அளவில் தன் இணையப்பக்கத்தில் வெளியிட்டார்.

படத்தைப் பற்றி இரட்டை இயக்குநர்கள் பேசுகையில், “மலையாளத்தில் ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் யோகி பாபுவின் காமெடியுடன், கிராபிக்ஸ் காட்சிகளுடன் சேர்த்து திரைக்கதையை சுவராசியப்படுத்தியிருக்கிறோம்.

ஆறு வயது முதல் அறுபது வயது வரையுள்ள அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக ‘கூகுள் குட்டப்பா’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ரோபோ ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. அது செய்யும் குறும்புத்தனமான சேட்டைகள் குழந்தைகளையும், இளைஞர்களையும் உற்சாகப்படுத்தும்" என்றனர்.

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பாளர்களின் இயக்குநர் அவர் குறிப்பிடும் நாட்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பை முடித்துவிடுவார். இவர் இயக்கிய படங்களால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதில்லை என்பார்கள். அதே போன்று அவரிடம் உதவியாளர்களாக இருந்த சபரி - குரு இருவரும் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.

-இராமானுஜம்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

வியாழன் 5 ஆக 2021