மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

ஒரே நாளில் வெளியாகிறதா வலிமை & பீஸ்ட் ?

ஒரே நாளில் வெளியாகிறதா வலிமை & பீஸ்ட் ?

விஜய்யின் மாஸ்டர் படமும், அஜித்தின் வலிமை படமும் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் துவங்கியது. ஆனால், விஜய் ரசிகர்கள் மாஸ்டரைக் கொண்டாடிவிட்டார்கள். ஆனால், அஜித் ரசிகர்களுக்கு நீண்ட காலக் காத்திருப்பாகிவிட்டது வலிமை.

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் சிங்கிள் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. அதிக லொக்கேஷன்களில் படப்பிடிப்பு எடுக்க வேண்டியிருந்ததால் படத்தின் ரிலீஸானது தள்ளிப் போய்வருகிறது. வெளிநாடு ஷூட்டிங் மட்டுமே மீதமிருக்கிறது. அதையும், விரைவில் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அஜித் ரசிகர்களின் ஒரே கேள்வி, வலிமை ரிலீஸ் எப்போது என்பதே. தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த வெளியாவதால், முன்னதாக ஆயுத பூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது வலிமை டீம். ஆனால், இந்த வருடம் வலிமை இல்லையென்றே சொல்லப்படுகிறது.

படத்தை முடிப்பதில் இருக்கும் சவால்களே காரணம் என்கிறார்கள். அதனால், வலிமை ரிலீஸை அடுத்த வருட ஜனவரிக்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசனை போய்க் கொண்டிருக்கிறதாம்.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கிவருகிறார். விஜய், பூஜா ஹெக்டே நடிக்க சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவருகிறது. இந்தப் படத்துக்கு ‘பீஸ்ட்’ என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு மேற்கொண்டுவருகிறார்.

திட்டமிட்டதைவிட வேக வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவருகிறது. மூன்றாம் அலை ஏதும் வருவதற்குள் படப்பிடிப்பை முடித்துவிட திட்டமாம். அதோடு, பீஸ்ட் படத்தை அடுத்த வருட ஜனவரியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது.

ஆக, அஜித்தின் வலிமை படமும், விஜய்யின் பீஸ்ட் படமும் அடுத்த வருட பொங்கல் பண்டிகைக்கு ஒரே நாளில் அல்லது ஒரு நாள் முன்பின்னாக வெளியாக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால், நீண்ட வருடத்துக்குப் பிறகு அஜித், விஜய் படம் ஒரே நாளில் வெளியாகும்.

இறுதியாக, விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் படங்கள் பொங்கல் ரிலீசாக ஒரே நாளில் வெளியானது. இரண்டுமே மிகப்பெரிய ஹிட். அப்படியான, சர்ப்ரைஸ் மீண்டும் நடக்குமா என்பதைப் பொருத்திருந்துப் பார்க்கலாம்.

- தீரன்

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

வியாழன் 5 ஆக 2021