மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

கோர்ட் வாசல்ல கார்: அப்டேட் குமாரு

கோர்ட் வாசல்ல கார்: அப்டேட் குமாரு

சாலிகிராமத்துல நண்பரோட ரூமுக்கு போயிருந்தேன். ஒரு சினிமாவுக்கு டிஸ்கஷன் போய்க்கிட்டு இருந்துச்சு. அசிஸ்டென்ட் டைரக்டர் சொல்றாப்ல... ' சார் கிளைமாக்ஸ்ல இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை கோர்ட்டு முன்னாடி வேகமா கொண்டுபோய் நிறுத்தணும். கோர்ட் சும்மா அதிரணும் சார்'னு அவர் சொல்லிக்கிட்டிருக்கும் போதே... இந்த கதை விஜய்க்கா தனுஷுக்கானு கேட்டேன். அதுக்குள்ள ஃபிரண்ட் என்ன டீ சாப்பிட வெளியே கூட்டிட்டு வந்துட்டாரு...

நீங்க அப்டேட் பாருங்க

mohanram.ko

சாப்பிடும் போதே விலையும், ருசியும் 'மெஸ்'மெரிசம் செய்து விடுகிறது..

balebalu

நுழைவு தேர்வுக்கே விலக்கு தர மாட்டேங்கறாங்க இதுல நுழைவு வரிக்கு எல்லாம் விலக்கு கேட்டுகிட்டு ...

ச ப் பா ணி

ஆறு மணிக்கு மேல அரிச்சந்திரனே வாட்டர் பாக்கெட் வாங்கினாலும் தப்பாதான் பார்ப்பாரு கடைக்காரர்

நெல்லை அண்ணாச்சி

எவ்வளவு பசியையும் போக்ககூடிய வல்லமை படைத்தது பப்ஸம், தேநீரும்.

-verified

சிலந்தி

மாமனார் வீடு என்பது..

மானமும், மானம் சார்ந்த இடமும் ஆகும்..!!

தர்மஅடி தர்மலிங்கம்

மகளிருக்கு இலவசம்... ஆண்களுக்கு கூடுதல் கட்டணமா? - ஓபிஎஸ் அறிக்கை.

"பேருந்து மக்கள் சொத்து அதன் நஷ்டத்தை மக்களே ஏற்க வேண்டும்"னு யார் ஆட்சியில சொன்னாங்க..

balebalu

திருமண ஆல்பத்தில் நாம் இருக்கிறோமா இல்லையா என்பதை இனிமேல் உடைகளை வைத்து தான் தெரிந்து கொள்ளவேண்டும் !

-மாஸ்க் படுத்தும் பாடு

'வி'சித்திரன்

கவலைகள் திகட்ட கூடாதென்பதற்காகவே அவ்வப்போது சில சந்தோஷங்களும் தருகிறது வாழ்க்கை.

ச ப் பா ணி

கல்யாணம் பன்னாதேனு அட்வைஸ் செய்தாலும் செய்வது போலத்தான்..

இன்ஜினியரிங் எடுக்காதேனு சொன்னாலும் எடுப்பதும்.

தர்மஅடி தர்மலிங்கம்

சட்டமன்ற நூற்றாண்டு விழா: “திமுக செய்த வரலாற்றுப் பிழை” - செல்லூர் ராஜு.

நீங்க 'சைண்டிஸ்ட்' தானே வரலாற்று ஆசியர் மாதிரி பேசுறீங்களே..??

மயக்குநன்

கொரோனா ஊரடங்கு காலத்தில் பசியுடன் யாரும் உறங்கவில்லை!- பிரதமர் மோடி.

பெட்ரோல், டீசல், கேஸ் விலையை நெனச்சா, ஊரடங்கு இல்லைன்னாலுமே உறங்க முடியலியே..!

கோழியின் கிறுக்கல்!!

அங்க ஹெல்மெட்டுக்கு பிடிக்கிறாங்க' போன்ற உதவிகளின் வரிசையில் புது வரவு,

'அங்க மாஸ்குக்கு பிடிக்கிறாங்க பாஸ்'!!

- லாக் ஆப்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

வியாழன் 5 ஆக 2021