மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

விஜய்யைத் தொடர்ந்து தனுஷூக்கும் நீதிபதி கண்டனம்!

விஜய்யைத் தொடர்ந்து தனுஷூக்கும் நீதிபதி கண்டனம்!

சமீபத்தில் ஒரு செய்தி திரையுலகைப் பரபரக்க வைத்தது. விஜய்யின் சொகுசு காருக்கான வரிவிலக்கு வழக்கு தான் அது. நடிகர் விஜய்க்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு, நுழைவு வரியில் விலக்கு கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், விஜய்யை கடுமையாகச் சாடியிருந்தார். “நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல. கட்டாயப் பங்களிப்பு” என்று கடுமையாகச் சாடிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இரண்டு வார காலத்துக்குள் நுழைவு வரியினை விஜய் கட்ட வேண்டும் என்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்குச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு வழக்கு ஒன்றினைத் தொடர்ந்துள்ளார் விஜய்.

இந்நிலையில், சொகுசு காருக்கான வரிவிலக்கு வழக்கில் அடுத்த பரபரப்புக்குரிய செய்தியாகியிருக்கிறார் நடிகர் தனுஷ்.

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தனுஷ். அதன்படி, அவரின் வாகனத்துக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிகவரித் துறை உத்தரவிட்டதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குக்கான விசாரணை இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. ‘பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக வெறும் 50ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள். அதுபோல, ஒரு சோப்பு வாங்கும் சாமானியர்கள் கூட முறையாக வரி செலுத்துகிறார்கள்” என நீதிபதி கண்டனத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். அதோடு, முழுமையாக வரியை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதோடு, இன்று பிற்பகல் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆதினி

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

வியாழன் 5 ஆக 2021