மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

'கற்றது தமிழ்' ராம் இயக்கும் படத்தில் நிவின்பாலி - அஞ்சலி

'கற்றது தமிழ்' ராம் இயக்கும்  படத்தில் நிவின்பாலி - அஞ்சலி

'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த வி ஹவுஸ் நிறுவனம் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் 'மாநாடு' என்கிற படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த தயாரிப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வி ஹவுஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தப் புதிய படத்தை 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட ஆத்மார்த்தமான படங்களை இயக்கிய இயக்குநர் ராம் இயக்குகிறார்.

'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள மலையாளத் திரையுலகில் இளம் முன்னணி நாயகனாக வலம்வரும் நடிகர் நிவின்பாலி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தமிழ், மலையாள மொழி பேசும் ரசிகர்களிடம் அறிமுகமும், செல்வாக்கும் உள்ள நிவின்பாலி, தமிழ், தெலுங்கு,மலையாள மொழிப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக உள்ள நடிகை அஞ்சலி, மம்முட்டி நடித்த படத்தை இயக்கியதன் மூலம் மலையாள ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகம் உள்ளவர் கற்றது தமிழ் ராம். இதனால் இந்தப் படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாகத் தயாரிக்கப்பட உள்ளது தெலுங்கில் டப்பிங் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

புதன் 4 ஆக 2021