மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

இந்தியா - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்!

இந்தியா - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (ஆகஸ்ட் 4) பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்குகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தத் தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாகப் பயிற்சி செய்து தயாராகி உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது.

இந்த நிலையில், வலைப்பயிற்சியில் ஈடுபட்ட தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ஹெல்மெட் மீது பந்து பலமாகத் தாக்கியதால் காயம் அடைந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ‘மூளை அதிர்ச்சி’ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததால் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள மயங்க், முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மயங்க் அகர்வாலுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்புள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்திய அணி கடைசியாக இங்கிலாந்தில் 2007-ம் ஆண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு ஆடிய மூன்று தொடரிலும் தோல்வி அடைந்தது. கடைசியாக 2018-ல் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தொடரை வெல்லுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 127ஆவது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 126 போட்டியில் இந்தியா 29இல், இங்கிலாந்து 48இல் வெற்றி பெற்றுள்ளன. 49 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

-ராஜ்

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

புதன் 4 ஆக 2021