மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

அடுத்தடுத்து மூன்று படங்களுடன் வரும் இயக்குநர் பாலா

அடுத்தடுத்து மூன்று படங்களுடன் வரும் இயக்குநர் பாலா

தேசிய விருது இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ’நாச்சியார்’. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்தார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு , விக்ரமின் மகன் துருவ் நடிக்க ‘வர்மா’ படத்தை இயக்கினார் பாலா.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக் தான் வர்மா. ஆனால், பாலா இயக்கிய வர்மா படத்தின் மீது திருப்தி ஏற்படாத காரணத்தால், அந்தப் படத்தை அப்படியே வைத்துவிட்டு, மீண்டும் அதே படத்தை வேறு ஒரு இயக்குநரை வைத்து உருவாக்கியது தயாரிப்பு தரப்பு. அதனால், வர்மா வெளியாகவில்லை. அதற்குப் பதில், ஆதித்யவர்மா வெளியானது.

இந்த நிகழ்வு காரணமாக, கடந்த இரண்டு வருடங்களாக சைலண்ட் மோடில் இருந்தார் பாலா. இவரின் அடுத்தப் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. ஆனால், சைலண்டாக சூர்யாவை மட்டும் சந்தித்து வந்தார். அந்தத் தகவலைக் , நம்முடைய தளத்தில் பகிர்ந்திருந்தோம். தற்பொழுது, இது குறித்த கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

என்னவென்றால், அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்க இருக்காராம் பாலா. சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பிலும், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஒவ்வொரு படங்கள் இயக்க இருக்காராம் பாலா.

முதல்கட்டமாக, 2டி தயாரிக்கும் படத்தைத் துவங்குகிறார் என்று சொல்லப்படுகிறது. அந்தப் படத்தில் சூர்யா நடிக்கிறாரா அல்லது வேறு நடிகரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், இரண்டு கதாநாயகர்கள் கொண்டக் கதைக்களம் என்று தெரிகிறது.

அவன் இவன், பிதாமகன் என டபுள் ஹீரோ கதைகளில் எக்ஸ்பர்ட் பாலா. மீண்டும், அதே பாணியில் ஒரு கதையுடன் தயாராக இருக்கிறாராம். சூர்யா படத்தைத் தொடர்ந்து, ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தைக் கொடுக்க இருக்கிறார்.

- தீரன்

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

புதன் 4 ஆக 2021