மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

ஆர்யாவைத் தேடிவந்த புதிய வாய்ப்பு!

ஆர்யாவைத் தேடிவந்த புதிய வாய்ப்பு!

தமிழ் சினிமாவின் ராசியான ‘ஓடிடி ஹீரோ’ எனும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் ஆர்யா.

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்த டெடி மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ என இரண்டு படங்களுமே ஓடிடியில் வெளியாகி பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

எல்லா ஹீரோக்களின் படங்களும் ஓடிடிக்கு வருகிறது. ஆனால், ஓடிடியில் வெளியிட்டு தொடர்ந்து ஹிட் கொடுப்பதால் ஓடிடியின் லக்கியாக ஆர்யாவைப் பார்க்கிறதாம் திரையுலகம்.

அதுவும், சார்பட்டா ரிலீஸுக்குப் பிறகு ஓடிடியில் நடிக்க எக்கச்சக்க வாய்ப்புகள் தேடிவருகின்றனவாம். குறிப்பாக, வெப் சீரிஸில் நடிக்க பல கதைகள் ஆர்யாவைத் தேடிவந்திருக்கிறது. அதிலொரு கதைக்கு சம்மதமும் தெரிவித்திருக்கிறார் ஆர்யா.

சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கியவர் மிலிந்த் ராவ். நயன்தாரா நடிப்பில் ‘நெற்றிக்கண்’ படம் இவரின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கிறது. இவர், சமீபத்தில் ஆர்யாவைச் சந்தித்து வெப் சீரிஸுக்கான கதையைக் கூறியிருக்கிறார். அதோடு, பிரைம் வீடியோவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அமேசான் பிரைம் நிறுவனமும் படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறது. அதோடு, ஆர்யாவுக்குப் பெரும் தொகையும் சம்பளமாகப் பேசப்பட்டிருக்கிறதாம். இந்தப் படத்துக்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கியிருக்கிறது. ஆர்யாவின் ஓடிடி லக் தொடருமா என்பதைப் பொருத்திருந்துப் பார்க்கலாம்.

ஆர்யா நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷாலுடன் ‘எனிமி’ மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

அதோடு, சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்திலும், நளன் குமாரசாமி இயக்கத்திலும், சாந்தகுமார் இயக்கத்திலும் அடுத்தடுத்துப் படங்கள் நடிக்கவும் இருக்கிறார் ஆர்யா.

- ஆதினி

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

செவ்வாய் 3 ஆக 2021