மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

அன்பில் அங்கிள்: அப்டேட் குமாரு

அன்பில் அங்கிள்: அப்டேட் குமாரு

வீட்ல குழந்தைகள் அட்டகாசம் தாங்க முடியல. அடுத்த மாதத்திலிருந்து ஸ்கூல் இருக்கு... இனிமே இப்படி ஆடமுடியாதுனு சொல்லிக்கிட்டிருக்கும்போதே பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் னு டிவியில நியூஸ் வருது. அதப் பாத்துட்டு சின்னப்பையன், 'அன்பில் அங்கிளே சொல்லிட்டாரு. நீ போப்பானு சொல்லிட்டு ஓடிட்டான்.

போன ஆட்சியில இவங்களுக்கு செங்கோட்டையன் தாத்தா. இந்த ஆட்சியில அன்பில் அங்கிள். பெத்தவங்களுக்கு யார் இருக்கா?

நீங்க அப்டேட் பாருங்க

amudu

மேகேதாட்டு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை. -ஹெச்.ராஜா.

இதுக்கும்.. நீட் தேர்வு மாதிரி, ஏதாவது தகுதி தேர்வு எழுதி பாஸ் பண்ணி இருக்கனுமோ.?

நாகராஜசோழன்.MA.MLA.

"இதுவும் கடந்து போகும் "னு கேக்க நல்லா தான் இருக்கும்,

ஆனா... கடந்து போவதற்குள் வாழ்க்கைக்கும் மறக்காத மாதிரி போட்டு தாக்கீட்டு தான் போகும்.

மயக்குநன்

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியது!- அரசு புள்ளிவிவரத்தில் தகவல்.

யாரும் பெட்ரோல், டீசல் விலையேத்தத்தைப் பத்தி கவலைப்பட்ட மாதிரியே தெரியலியே அண்ணே..?!

ச ப் பா ணி

மொக்கப் படமாக இருந்தாலும் சந்தோசமாக பார்க்கலாம்., அருகில் நண்பன் இருந்தால்

amudu

ஜியோ கம்பெனி கவர்மெண்ட் கம்பெனியான்னு பையன் கேட்டான். கவர்மெண்ட் தான் ஜியோவோட ஒரு கம்பெனின்னு நான் விளக்கம் சொன்னேன்.

ஊர்க்காவலன்

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டால் அது தீவு...

நான்கு பக்கமும் கடனால் சூழப்பட்டால் ஏது தீர்வு

மயக்குநன்

தமிழகத்துக்கு மட்டும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது!- பொன்.ராதாகிருஷ்ணன்.

மதுரையில் இருக்கிற அந்த 'ஒத்தைச் செங்கலை'யும் சேர்த்தா... சேர்க்காமலா..?!

ச ப் பா ணி

ஹோட்டல் உணவுகளை தவிர்ப்பதெல்லாம்..

வயிறு அறியும் உண்மைச் சட்டத்தில் சேர்ந்தது

சரவணன். ℳ

கறிக்கடை வைத்து உயிரை எடுக்கும் ஒவ்வொருவரும் "எமதர்மன்" தான்.

கோழியின் கிறுக்கல்!!

முன்னெல்லாம் மாத பட்ஜெட்டில் 'துண்டு' விழும்,

இப்பெல்லாம் ஒரு பெரிய ஜமக்காளமே விழுகிறது!!

-லாக் ஆஃப்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 3 ஆக 2021