மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

நான்காவது முறையாக கூட்டணி அமைக்கும் பா.ரஞ்சித்

நான்காவது முறையாக கூட்டணி அமைக்கும் பா.ரஞ்சித்

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். ஏனெனில், எந்த தயக்கமும், அச்சமுமின்றி தைரியமாக இவரின் படங்களைப் பார்க்கலாம். ரசிகர்களை திருப்திப் படுத்தும் எதாவதொன்று நிச்சயம் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பல சிறப்பு மிக்க திரைப்படங்களைக் கொடுத்துவருகிறார் பா.ரஞ்சித். இவரின், சமீபத்திய படைப்பாக ‘சார்பட்டா பரம்பரை’ ஓடிடியில் வெளியாகி பெரியளவில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

வடசென்னையின் பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. ஆர்யா, பசுபதி, துஷாரா, கலையரசன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படமும் செம ரீச்.

அடுத்தக்கட்டமாக படமொன்றை தயாரிக்க இருக்காராம் பா.ரஞ்சித். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’, அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படங்கள் வெளியாகியுள்ளது. சமுத்திரகனி நடிக்க ரைட்டர் எனும் படம் உருவாகிவருகிறது.

தொடர்ச்சியாக, புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே பட தயாரிப்பில் இறங்கியவர் ரஞ்சித். அதன்படி, இவரின் அடுத்த தயாரிப்பிலும் புதுமுக இயக்குநருக்கே வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கும் படத்தை சுரேஷ் மாரி என்பவர் இயக்க இருக்கிறார். இப்படத்தில் நாயகனாக தினேஷ் நடிக்க இருக்காராம்.

ரஞ்சித்தின் முதல் படமான அட்டக்கத்தியில் நாயகன் தினேஷ். ரஜினியின் கபாலி படத்திலும் ஒரு ரோல் செய்திருப்பார். அதோடு, அதியன் ஆதிரை இயக்கிய இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தில் நாயகனாக நடித்திருப்பார். பா.ரஞ்சித்துடன் நான்காவது முறையாக இணைந்து பணியாற்ற இருக்கிறார் அட்டக்கத்தி தினேஷ்.

படத்துக்கான முதல்கட்டப் பணிகள் துவங்கியிருக்கிறதாம். விரைவிலேயே, படம் குறித்த முழு தகவலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சார்பட்டா பரம்பரை முடித்த கையோடு அடுத்தப் படத்தின் இயக்கத்தைத் துவங்கிவிட்டார் பா.ரஞ்சித். காளிதாஸ் ஜெயராம், துஷாரா நடிக்க முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகும் ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ படம் ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகிவருகிறது.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

செவ்வாய் 3 ஆக 2021