மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

‘சரவணா ஸ்டோர்ஸ்’ அண்ணாச்சி நடித்துவரும் படத்தின் கதை !

‘சரவணா ஸ்டோர்ஸ்’ அண்ணாச்சி நடித்துவரும் படத்தின் கதை !

என் நிறுவனத்துக்கு நானே முகவரியாக இருக்கிறேன் என லெஜண்ட் சரவணா ஸ்டோருக்கான விளம்பரப் படத்தில் நடித்து மக்கள் கவனம் ஈர்த்தவர் ‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ அருள்.

விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். திரைப்படமொன்றில் நடிகராக உதயமாவதே அந்த அறிவிப்பு. முதலில் மக்களுக்கு ஷாக்கிங்காக இருந்தாலும், அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் மீது கொஞ்சம் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படங்களை தொடர்ச்சியாக எடுத்துவரும் ஜேடி & ஜெர்ரி இருவர் இந்தப் படத்தை இயக்கிவருகிறார்கள். இவர்கள், உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்கள். கடந்த 2019ல் துவங்கிய படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்துவிட்டது.

படத்துக்கான சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாக சமீபத்தில் தகவலெல்லாம் வெளியானது. அதோடு, முதல் அலை முடிந்த நேரத்தில் குலு மணாலியில் படப்பிடிப்பை நடத்தினார்கள் படக்குழுவினர். அந்தப் புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தப் படத்தில் நாயகியாக ஊர்வசி ரவுத்தேலா நடிக்கிறார். விவேக், ரோபோ ஷங்கர், விஜயகுமார், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களும் படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இந்தப் படம் குறித்த இரண்டு முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளது. இந்தப் படத்துக்கு ‘லெஜண்ட்’ என பெயர் உறுதி செய்யப்பட்டிருக்காம். அதோடு, படத்தின் கதை என்னவென்றால், விஞ்ஞானி ரோலில் நடிக்கிறாராம் சரவணன் அருள் . விஞ்ஞானியான இவர் கண்டுபிடிப்பு நிராகரிக்கப்படுகிறது. அதை எதிர்த்துப் போராடி எப்படி வெல்கிறார் என்பதே கதைக்களமாம்.

படத்தின் கதைக்கும், டைட்டிலுக்குமே ஒத்துப் போகிறது. அதோடு, அவரின் நிறுவனத்தின் பெயரையும் விளம்பரமாக உள்ளே கொண்டுவந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விரைவிலேயே படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

- ஆதினி

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

செவ்வாய் 3 ஆக 2021