மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

ஆண்டவர் கட்டளையை மீறிட்டாங்களே: அப்டேட் குமாரு

ஆண்டவர் கட்டளையை மீறிட்டாங்களே: அப்டேட் குமாரு

கோயமுத்தூர் போறதுக்கு முந்தியே, என்னை வரவேற்க யாரும் வராதீங்க கொரோனா விதிகளை பின்பத்துங்கனு ஆழ்வார் பேட்டை ஆண்டவர் அறிக்கை விட்டுட்டுதான் கெளம்பினாரு. ஆனாலும் அவரை வரவேற்க கூட்டமா திரண்டு கொரோனா வாழ்க கோஷம் போடாத குறையா கமல் வாழ்கனு கோஷம் போட்டாங்க. இப்ப போலீஸ் அவங்க மேல கேஸ் போட்டிருக்காங்க. ஆண்டவரே உங்க பேச்சை கேட்காதவங்களை கட்சில இருந்து நீக்குவீங்களா? இல்ல... எல்லாரும் வரணும்னு சொல்றதைதான் சிம்பாலிக்கா வரவேணாம்னு சொன்னீங்களா?

நீங்க அப்டேட் பாருங்க

சப்பாணி

சக மனிதரிடம் தவறாக நடந்துவிட்டு, கடவுளிடம் சரியாக நடந்துகொள்வது பலனற்றது

amudu

நாம் வேலை செய்வது மனைவி, மேனேஜர் தவிர, உலகில் உள்ள அனைவரின் கண்களுக்கும் தெரியும்.

பர்வீன் யூனுஸ்

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகளை மூட சொல்லி விட்டது அரசு. வாழ்ந்து கெட்ட குடும்பம் மாதிரி காட்சி அளிக்கிறது ரங்கநாதன் ஸ்ட்ரீட்.

amudu

கோல்டு கவரிங் கடைக்கு, ஏழைகளின் நகைக்கடை என்று பெயர்.

Muthusamy Muthusamy

தம்பி.... வாக்கிங் வந்த இடத்துல ரெண்டு போண்டாவ வாங்கி திங்கிறியே... அப்றம் எப்படி பலன் கிடைக்கும்...?

வாக்கிங் வந்ததே போண்டா வாங்கி திங்க தான்.... போவியா...

Mannar & company

"கரெக்ட்" பண்ண முடியலைன்னு சொன்னா அது 'Crush',

"சரி" பண்ண முடியலைன்னு சொன்னா அது 'Wife'.

PrabuG

முன்னலாம் வெளிநாட்டுலேருந்து இங்க வந்தா சென்ட் வாங்கிட்டு வந்துருப்பான், கோடாலி தைலம் வாங்கிட்டு வந்துருப்பான்னு கும்பல் கும்பலா விசாரிக்க வருவாங்க.

இப்பலாம் கொரோனா வாங்கிட்டு வந்துருப்பான், கரும்பூஞ்சை வாங்கிட்டு வந்துருப்பான்னு ஒருத்தரும் மதிக்குறதில்லை...

ச ப் பா ணி

காத்திருப்பதன் வலியை ட்ராபிக் சிக்னலில் உணரலாம்

தர்மஅடி தர்மலிங்கம்

திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து ஆட்சியை பிடித்துள்ளது- எடப்பாடி பழனிசாமி!

உண்மையான தேர்தல் வாக்குறுதியை அளித்ததால் தான் அதிமுகவால் ஆட்சியை பிடிக்க முடியலையோ.??

மயக்குநன்

தமிழகத்தில் புதிதாக 120 உழவர் சந்தைகள் அமைக்கப்படும்!- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

இப்ப... 'உளவு' சந்தைதானே ட்ரெண்டிங்ல இருக்கு தலைவரே..?!

கோழியின் கிறுக்கல்!!

மனிதன் எவற்றையெல்லாம் உணவாக்கலாம் என்று சிந்திந்திருந்தப் பொழுது நிம்மதியாக இருந்த வாழ்க்கை,

எவற்றையெல்லாம் பணமாக்கலாம் என்று சிந்திக்கத் தொடங்கிய பொழுது நிம்மதியை இழக்கத் தொடங்கி விட்டது!!

-லாக் ஆப்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

திங்கள் 2 ஆக 2021