மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

சிம்பு படத்தின் அடுத்த பஞ்சாயத்து!

சிம்பு படத்தின் அடுத்த பஞ்சாயத்து!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் 'நதிகளிலே நீராடும்' சூரியன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு பெப்சி ஒத்துழைக்காது என தயாரிப்பாளர் தரப்புக்கு தகவல் தெரிவித்துள்ளது.

பெப்சி தலைமை சிலம்பரசன் நடிக்கும் படமென்றாலே அதில் பஞ்சாயத்து இல்லாமல் இருக்காது படப்பிடிப்புக்கு வராமல் சிலம்பரசன்தான் சிக்கல் ஏற்படுத்துவது வழக்கம் இந்த முறை அதனை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் செய்துள்ளது.

என்ன பஞ்சாயத்து என்றபோது தயாரிப்பாளர்கள் சங்க தரப்பில் வந்து விழுந்த பதில்.....

"மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இதில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்புக்கு சிலம்பரசன் தொடக்கம் முதலே நேரத்திற்கு வராததால் படப்பிடிப்பிற்கு ஏற்பாடு செய்து அது நடைபெறாமல் போகும்போது பட்ஜெட் அதிகரிகத்தது. . அதற்குரிய வகையில் படம் வியாபாரம் ஆகவில்லை என்பதுடன் படம் வெளியான முதல் நாளே படம் தோல்வியை தழுவியது. இதனால் இருபது கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மைக்கேல் ராயப்பன், இதற்கு முக்கிய காரணமாக இருந்த சிலம்பரசன் நட்ட தொகையில் பங்கேற்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்தப் புகார் குறித்து விசாரிக்கவேண்டும், அதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமுடிவு காணும்வரை சிம்பு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவேண்டாம் என தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திடம் சொல்ல அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

அதோடு, சிம்பு படக் குழுவினரைத் தொடர்புகொண்டு இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வரை உங்கள் படப்பிடிப்பில் பங்கேற்கமாட்டோம் என்றும் சொல்லிவிட்டார்களாம்.

இச்சிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம்,தயாரிப்பாளர் சங்கமே ஒரு படத்தின் படப்பிடிப்பை நிறுத்துவதா? என்கிற சர்ச்சையும் எழுந்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் தேனாண்டாள் முரளி, அராஜகமாகச் செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இதுதொடர்பாகத் தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் விசாரித்தால்,

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்புவால் இருபது கோடிக்கு மேல் நட்டம் எனப்புகார் கொடுத்தது எல்லோருக்கும் தெரியும், அதோடு,இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ்சந்திரபோஸிடம் ஒரு கோடி வாங்கிப் பலவருடங்கள் ஆகின்றன அதற்கு இதுவரை எந்தப்பதிலும் இல்லை, இவற்றோடு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி சிம்புவுக்கு மூன்றரைகோடி கொடுத்து சில வருடங்கள் ஆகின்றன. அதற்கும் இதுவரை விடையில்லை, இவை மட்டுமின்றி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடமும் பணம் வாங்கிக் கொண்டு பதில் சொல்லாமல் இருக்கிறார் சிம்பு.

இப்படி நான்கு தயாரிப்பாளர்கள் கொடுத்த புகார் காரணமாக, சிம்பு நடிக்கும் புதிய படம் தொடங்கும் முன்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறோம். படப்பிடிப்பு நடக்கும்போது நாங்கள் தடுக்கவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கம் தயாரிப்பாளர்கள் நலன்களுக்காகப் பேசுகிறது. இது தவறு என்று சொல்கிறவர்கள் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடிகருக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள் என்று அர்த்தம். அவர்களைப் பற்றி நாங்கள் கவலைகொள்ளவில்லை என்கிறார்கள்.

-இராமானுஜம்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

திங்கள் 2 ஆக 2021