மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

இன்றிரவு வெளியாகிறதா வலிமை முதல் சிங்கிள் ?

இன்றிரவு வெளியாகிறதா வலிமை முதல் சிங்கிள் ?

நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹெச்.வினோத், போனியுடன் அஜித் இணைந்திருக்கும் படம் வலிமை. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். தற்பொழுது, வலிமை படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்திருக்கிறது. ரஷ்யாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடிக்கத் தயாராகி வருகிறது படக்குழு.

ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்குப் பலனாக வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் & ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது. படத்தையும் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடவும் யோசித்து வருகிறது படக்குழு. அதன்படி, படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிடவும் படக்குழு தயாராகிவருகிறது.

வலிமை படத்தின் டீஸர் ரிலீஸூக்கு முன்பாக, படத்திலிருந்து சிங்கிள் பாடலொன்றை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்காம். அஜித்தின் ஓபனிங் பாடலாக இருக்கும் என்கிறார்கள். இந்தப் பாடலானது இன்றிரவு வெளியாகுமென இணையதளத்தில் செய்திகள் பரபரப்பாக பகிரப்பட்டுவருகிறது.

நமக்குக் கிடைத்தத் தகவல்படி, வலிமை கதை மதுரையில் அஜித் இருக்கும் காட்சிகளின் போது வரும் பாடலாக இருக்கும் என்கிறார்கள். அதோடு, ‘நாங்க வேற மாதிரி’ என இப்பாடல் துவங்குமாம். அதோடு, படத்தின் டீஸரை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

அஜித்துடன் காலா நாயகி ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, சுமித்ரா, ராஜ் ஐயப்பா, யோகிபாபு மற்றும் புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் வெளியானது போல் முதல் சிங்கிளும் தயாராகிறதா ? பொருத்திருந்துப் பார்க்கலாம்.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 2 ஆக 2021