மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

மூன்றாம் கட்டத்தில் ‘பீஸ்ட்’ : வேகவேகமாக நடக்கும் ஷூட்டிங்!

மூன்றாம் கட்டத்தில் ‘பீஸ்ட்’ :  வேகவேகமாக நடக்கும் ஷூட்டிங்!

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் விஜய்க்கு மிகப்பெரிய உயரத்தைக் கொடுத்துவிட்டது. படத்துக்குப் படம் ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகிவருகிறது. இப்போது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இடத்தில் நெல்சன் இருக்கிறார்.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கியவரின் மூன்றாவது படமான ‘பீஸ்ட்’டில், விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் உருவாகி வருகிறது.

பீஸ்ட் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பும் வேகம் கொண்டுள்ளது. பீஸ்ட் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பானது ஜார்ஜியாவில் நடந்தது.

இரண்டாம் கட்ட ஷெட்யூலானது சென்னையில் மூன்று இடங்களில் செட் அமைத்துப் படப்பிடிப்பை நடத்தினார்கள். பூஜா ஹெக்டே கலந்துகொள்ளப் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டது.

தற்போது மூன்றாம் கட்ட ஷெட்யூலை படக்குழு துவங்கியிருக்கிறது. ஷார்ட் டைமில் முடியும் ஷெட்யூல் என்று சொல்லப்படுகிறது. பீஸ்ட் படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிடுவது என்பதே திட்டம். அப்படியிருக்கையில், வேக வேகமாகப் படப்பிடிப்பை முடிப்பதற்கும் காரணம் இருக்காம்.

ரஜினியின் ‘அண்ணாத்த’, அஜித்தின் ‘வலிமை’ படங்களிலிருந்து கற்றுக் கொண்டப் பாடம் என்கிறார்கள். கொரோனா அச்சுறுத்ததால் படப்பிடிப்பு நடத்துவதில் துவங்கி, ரிலீஸ் வரை மிகப்பெரிய குழப்பத்தையும், சிக்கலையும் இரண்டு படங்களுமே சந்தித்துவருகிறது. குறிப்பாக, வலிமை படத்தை வருகிற அக்டோபரில் வெளியிட யோசனைப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், படத்தின் வெளிநாடு ஷூட்டிங் இன்னும் 10 நாட்கள் மீதமிருக்கிறது.

ஆக, இறுதி நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, அவசர அவசரமாக வெளியிடுவதிலும் விஜய் டீமுக்கு விருப்பமில்லையாம். எப்போது லாக்டவுன் வரும் என்பதை கணிக்க முடியவில்லை. அதோடு, மூன்றாம் அலை குறித்த அச்சம் நிலவுவதால் படப்பிடிப்பை முதலில் முடித்துவிடுவோம். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை மெதுவாகப் பார்த்துக் கொள்ளலாம் என தயாரிப்புத் தரப்பிலிருந்து கூறியிருக்கிறார்கள். அதனால், பீஸ்ட் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

- தீரன்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

திங்கள் 2 ஆக 2021