மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

கடன் பிரச்சினையால் வதைபடும் நரகாசூரன்!

கடன் பிரச்சினையால் வதைபடும் நரகாசூரன்!

தமிழ் சினிமாவில் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக வேலை கற்றுக்கொள்ளாமல் இயக்குநராவது அரிதானது.

இயக்குநர் ஆக வேண்டும் என்பதற்காக சொந்த பணத்தில் துருவங்கள் பதினாறு படத்தை தயாரித்தவர் நரேன் கார்த்திக். படைப்புரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றிபெற்றது துருவங்கள் பதினாறு.

இந்தப்பட வெற்றியின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குநராக மாறிய நரேன் கார்த்திக் இயக்கத்தில் நடிக்க பல முண்ணனி நடிகர்கள் பேச்சுவார்த்தையில் இருந்தபோது கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார் நரேன் கார்த்திக்.

அரவிந்த்சாமி, சந்தீப், இந்திரஜித் என முக்கிய ஹீரோக்கள் நடித்த நரகாசூரன் படத்தைத் தயாரிக்க பலரிடமும் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ் மேனன், நரகாசூரன் படப்பிடிப்புக்கு அந்தப் பணத்தைச் செலவு செய்யவில்லை; தனது சொந்த கடன் பிரச்சினைகளைத் தீர்க்க பயன்படுத்திக்கொண்டதாகக் கூறப்பட்டது.

இயக்குநராக ஒப்பந்தமான நரேன் கார்த்திக், கௌரவம் கருதி சொந்தப் பணத்தை முதலீடு செய்து படப்பிடிப்பை முடித்துவிட்டார். கௌதம் மேனன் படத்தயாரிப்புக்காக வாங்கிய கடன்கள், ஏற்கனவே திரைத்துறையில் அவர் கொடுக்க வேண்டிய கடன் பாக்கிகள், நரகாசூரன் படத்தயாரிப்பு செலவைப் போன்று மும்மடங்கானது. படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தபோதும் கொடுக்க வேண்டிய கடன்தொகை அளவுக்குப் படம் வியாபாரம் ஆவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் நரகாசூரன் படம் முடங்கியது. கடந்த நான்கு வருடங்களாக ரிலீஸாக முடியாமல் தவித்து வருகிறது.

இந்த நிலையில் ஓடிடி தளத்தில் இந்தப் படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒருவழியாக ஆகஸ்ட் 13இல் இந்தப் படம் வெளியிடுவது என உறுதியானது.

ஆனால், கௌதம் வாசுதேவ் மேனன் கடன் பாக்கிகள் புதிது புதிதாக வந்து கொண்டிருப்பதால் திட்டமிட்டதைக் காட்டிலும் அதிக தொகை தேவைப்படுகிறது. அதனால் பைனான்சியர்களிடம் கடன் தொகையை திருப்பிக்கொடுத்து அவர்களிடம் இருந்து படத்திற்கான தடையில்லா சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. அதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 13ல் நரகாசூரன் வெளியாவது சந்தேகம்தான் என்றும் சொல்லப்படுகிறது.

-இராமானுஜம்

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

2 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

மெட்டி ஒலி உமா மகேஸ்வரி காலமானார்!

2 நிமிட வாசிப்பு

மெட்டி ஒலி  உமா மகேஸ்வரி காலமானார்!

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

5 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

திங்கள் 2 ஆக 2021