மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

D44 அப்டேட்: தனுஷுடன் நடிக்கும் இரண்டு முன்னணி நடிகைகள்!

D44 அப்டேட்: தனுஷுடன் நடிக்கும் இரண்டு முன்னணி நடிகைகள்!

இந்த வருடம் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ படங்கள் வெளியாகின.

இதில், கர்ணன் மிகப் பெரிய ஹிட். ஜெகமே தந்திரம் சுமாரான வரவேற்புப் பெற்றது. அடுத்ததாக, இந்தியில் அக்‌ஷய் குமாருடன் நடித்திருக்கும் ‘அட்ராங்கி ரே’ படம் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில், அவெஞ்சர்ஸ் இயக்குநர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் ஹாலிவுட்டில் உருவாகிவரும் ‘க்ரே மேன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்தார். தற்போது, தனுஷின் 43ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. கார்த்திக் நரேன் இயக்கி வரும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு மாறன் என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகியாக மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் நடித்துவருகிறார்.

ஒன்றிரண்டு படங்களில் உச்சம் தொடும் இயக்குநர்களைத் தேடிப்பிடிப்பது போல, ஹிட் லிஸ்டில் இருக்கும் நாயகிகளையும் படங்களில் இணைத்துக்கொள்கிறார் தனுஷ். அப்படி, தனுஷின் 44ஆவது படத்தின் நாயகிகள் குறித்து தெரியவந்துள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘D44’. இந்தப் படத்தில் நீண்ட நாளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைகிறது. விரைவில், படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படத்துக்கான நாயகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாகப் போய்க் கொண்டிருந்தது.

அதன்படி, தனுஷ் 44 படத்தில் நாயகிகளாக ப்ரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா இருவரும் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். இரண்டு பேருக்குமே இணையான ரோல் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

மித்ரன் ஜவஹருடன் நான்காவது முறையாகக் கூட்டணி அமைக்கிறார் தனுஷ். குட்டி, உத்தமபுத்திரன் மற்றும் யாரடி நீ மோகினி என மூன்று படமுமே தனுஷுக்கு கமர்ஷியலாக ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மித்ரன் ஜவஹர் படத்தோடு செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘நானே வருவேன்’ படமும் ஒரே நேரத்தில் தொடங்குகிறது. இவ்விரு படங்களைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படமும் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

ஞாயிறு 1 ஆக 2021