மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

சன்னிலியோன் படத்தில் நடிக்கும் ஜி.பி.முத்து

சன்னிலியோன் படத்தில் நடிக்கும் ஜி.பி.முத்து

முன்னொரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமாகிவந்தார்கள் இப்போது, சமூக வலைதளத்தின் தாக்கம் அனைத்தையும் மாற்றி எழுதிவிட்டது.

சோசியல் மீடியாவில் வைரலாகும் நபர்கள் எளிதில் பிரபலமாகிவிடுகிறார்கள். ஒரு செல்போனை வைத்துக் கொண்டு உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்துவிடும் மில்லினிய யுகம் இது.

அதோடு, சோசியல் மீடியாவில் வைரலாகும் நபர்களை சினிமாவும் பயன்படுத்திக் கொள்கிறது. டிக்டாக்கில் பிரபலமான மிருணாளினி ரவி திரைப்படங்களில் ஹீரோயினாகிவிட்டார். ஃபேஸ்புக்கில் மொக்கை போட்டுவந்த மண்ணை சாதிக் ஒரு சில படங்களில் தலைகாட்டிவிட்டார். யூடியூப்பில் எதோ ஒரு வீடியோவில் எதார்த்தமாக வந்து சிக்கிய பிஜிலி ரமேஷ் திரைப்படங்களில் நடிக்கிறார், ரியாலிட்டி ஷோக்களில் வருகிறார். இப்படி, சோசியல் மீடியாவால் பிரபலமான மற்றொரு நபர் ஜி.பி.முத்து.

டிக்டாக் இருந்த காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார் ஜி.பி.முத்து. டிக்டாக் தடை செய்யப்பட்டப் பிறகு, யூடியூப்பில் சேனல் ஒன்றை துவங்கினார். இப்போது, ஒன்பது லட்சத்துக்கும் மேல் ரசிகர்கள் அவரைப் பின் தொடர்கின்றனர். ஒவ்வொரு வீடியோவும் லட்சத்தில் ஹிட்டாகிறது. இதன் தொடர்ச்சியாக, திரைப்படங்களில் நடிக்க போகிறார் ஜி.பி.முத்து.

நடிகர் சசிகுமார் மற்றும் குக் வித் கோமாளி தர்ஷா நடிப்பில் ஒரு படம் உருவாகிவருகிறது. திகில் கலந்த காமெடி படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். இவர்களோடு, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் சன்னி லியோனுடன் ஒரு முக்கிய ரோலில் ஜி.பி.முத்து நடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தில் டாக்டர் ரோலில் வருகிறாராம். நிச்சயம், காமெடி ரோலாகத்தான் இருக்கும். ஆனால், எந்த மாதிரியென்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சன்னி லியோன். ஒரு பாடலுக்கு மட்டும் வந்தவர், தற்பொழுது வீரமாதேவி எனும் தமிழ் படத்தில் நடித்துவருகிறார். பெரும்பாலும் இந்தி படங்கள், ஒரு சில தெலுங்கு , மலையாளப் படங்களென நடித்துவருகிறார் சன்னிலியோன்.

-ஆதினி

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

ஞாயிறு 1 ஆக 2021