மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

பாகுபலியை நினைவூட்டும் RRR-ன் ‘நட்பு’ பாடல் !

பாகுபலியை நினைவூட்டும்  RRR-ன் ‘நட்பு’ பாடல் !

பாகுபலி எனும் பிரம்மாண்ட படைப்பைக் கொடுத்தவர் ‘ராஜமெளலி’. பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு இந்தியளவில் வரவேற்பு கிடைத்தது. மன்னர் காலத்துப் புனைவுத் திரைப்படமாக வெளியானது பாகுபலியின் இரண்டு பாகங்கள்.

பாகுபலி முடித்த கையோடு வரலாற்றில் அசத்திய இரண்டு மனிதர்களைப் பற்றிய ரியல் கதையோடு வந்திருக்கிறார் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க உருவாகிவரும் படம் ‘ஆர் ஆர் ஆர்’. அதாவது, ‘ரணம் ரத்தம் ரெளத்ரம்’ எனும் இப்படத்தில் அலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் டீஸர் வீடியோக்கள் வெளியாகி பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.

நிஜத்தில் வரலாற்றில் வாழ்ந்த மனிதர்களின் கதைக்குள் ராமன்-சீதா கதையை இணைத்துப் புனைவாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படமானது, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வருகிற அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

முதல்கட்டமாக, இப்படத்தில் இடம்பெறும் ‘நட்பு’ எனும் பாடல் வீடியோ வெளியாகியிருக்கிறது. தமிழில் ‘நட்பு’ எனும் பெயரிலும், தெலுங்கு, கன்னடம் & இந்தியில் ‘தோஸ்து’ எனும் பெயரிலும் , மலையாளத்தில் ’பிரியம்’ எனும் பெயரிலும் வீடியோ வெளியாகியிருக்கிறது.

இப்பாடலை தமிழில் அனிருத், தெலுங்கு வெர்ஷனை ஹேமசந்திரா, கன்னடத்தில் யாசின் நிசார், மலையாள வெர்ஷனை விஜய் யேசுதாஸ், இந்தியில் அமித் த்ரிவேதி ஆகியோர் பாடியுள்ளனர். ஒவ்வொரு மொழியிலும் டிரெண்ட்டிங் பாடகர்களைத் தேர்ந்தெடுத்து பாட வைத்திருக்கிறார்கள்.

பாடல் காட்சிக்கே பிரம்மாண்ட செட், அதிரடிக்கும் காட்சிகளென பாடல் காட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். பாகுபலியைத் தொடர்ந்து இப்படத்துக்கும் இசை எம்.எம். கீரவாணி. இந்தப் பாடலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு நிலவுகிறது. இருப்பினும், பாகுபலி படத்தில் இடம்பெற்ற பின்னணி இசையையும், பாடல் இசையையுமே மீண்டும் நினைவுப்படுத்துகிறது.

இசையமைப்பாளர் கீரவாணியின் மிகச்சிறந்த இசைக் கோர்ப்பாக பாகுபலி பார்க்கப்பட்டது. அதை மிஞ்சும் இசையை RRR படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் சிங்கிளில் பாகுபலியில் கொடுத்த இசையையே மீண்டும் நினைவூட்டுவதாக ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்துவருகின்றனர்.

படத்திலிருந்து இனிவரவிருக்கும் பாடல்களில் கீரவாணியின் பெஸ்ட் மியூசிக் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

நட்பு பாடல்

- ஆதினி

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி மம்மூட்டி உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி  மம்மூட்டி உருக்கம்!

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார் ...

3 நிமிட வாசிப்பு

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார்

ஞாயிறு 1 ஆக 2021