மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

அப்பா கேங்ஸ்டர், பையன் போலீஸ் : கார்த்திக் சுப்பராஜ் நெக்ஸ்ட் !

அப்பா கேங்ஸ்டர், பையன் போலீஸ் : கார்த்திக் சுப்பராஜ் நெக்ஸ்ட் !

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ‘ஜெகமே தந்திரம்’ படம் சமீபத்தில் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இந்தப் படத்துக்கு சுமாரான வரவேற்பு மட்டுமே கிடைத்தது.

இந்நிலையில், கார்த்திக் இயக்கத்தில் அடுத்து ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் ‘சியான்60’. விக்ரம் நடிக்கும்60வது படம். இந்தப் படத்தில் விக்ரமுடன் , அவரின் மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துவருகிறார். படத்துக்கான முக்கால் பாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும், 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமிருக்கிறது.

இறுதிக்கட்ட ஷெட்யூலானது டார்ஜிலிங் பகுதியில் நடக்க இருக்கிறது. நான்கு தினங்களுக்கு முன்பே டார்ஜிலிங் சென்றுவிட்டார் கார்த்திக் சுப்பராஜ். இந்நிலையில், விக்ரம் உட்பட படக்குழு நேற்று சென்றது .

இந்நிலையில், இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கப்போகும் கேரக்டர் குறித்த தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம் துருவ்.

சமீபத்தில் திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார் துருவ். அதில், போலீஸ் ஹேர் கட் செய்திருந்தார். அதனால், போலீசாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியானது. அதோடு, விக்ரம் கேங்ஸ்டராக நடிக்கிறாராம்.

கார்த்திக் சுப்பராஜ் படமென்றாலே கேங்ஸ்டர் ஸ்டோரியாகத் தான் இருக்கும். அப்படி, இந்தப் படத்தில் விக்ரம் கேங்ஸ்டராக வருகிறார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் முடிய இருக்கிறது.

இந்தப் படத்தை முடித்தகையோடு, மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் விக்ரம் கலந்துகொள்ள இருக்கிறார். அதுபோல, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார்.

மாஸ்டர் இணைத் தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சியான் 60 படத்தைத் தயாரிக்கிறது. சிம்ரன், வாணி போஜன், பாபிசிம்ஹா ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

-ஆதினி

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஞாயிறு 1 ஆக 2021