மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

பிச்சைகாரன்-2 முதல் பார்வைக்கு எதிர்ப்பு!

பிச்சைகாரன்-2  முதல் பார்வைக்கு எதிர்ப்பு!

பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடித்து, தயாரிக்க இருப்பதாக விஜய் ஆண்டனி. அவரின் பிறந்தநாளின் போது அறிவித்தார். அதோடு படத்தின் முதல் பார்வை சுவரொட்டி ஒன்றையும் வெளியிட்டனர்.

அதில் படத்தின் தலைப்போடு உக்கிரமான காளி படம் ஒன்றும் இடம் பெற்று இருந்தது. பிச்சைக்காரன் -2 படத்திற்கும் காளிக்கும் என்ன சம்பந்தம் என அப்போது சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதுதான் சினிமா. ஆனால் மதம் சார்ந்த பழமைவாதிகள் இது போன்ற விளம்பரங்கள், சுவரொட்டிகளை எதிர்த்து அறிக்கை வெளியிடுவது, போராட்டம் நடத்துவதை பிரதான வேலையாக கொண்டுள்ளனர் இந்து மத தலைவர்கள்.

இந்நிலையில் பிச்சைகாரன் - 2 முதல் பார்வை சுவரொட்டிக்குஇந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் எம்.சோலைகண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், ‛‛விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்- 2 பட போஸ்டரில் இந்து மக்கள் போற்றி வணங்கும் காளி மாதாவின் திருவுருவ படத்துடன் பிச்சைக்காரன்-2 என்ற எழுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒட்டுமொத்த இந்து மக்களின் மனதை காயப்படுத்தும் வகையிலும், எங்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இந்துமத கடவுளை இழிவுபடுத்த வேண்டும் என்ற திட்டமிட்டு உள்நோக்கத்துடன் இந்த போஸ்டரை வடிவமைக்கப் பட்டுள்ளது போல் தெரிய வருகிறது.

திரைப்படம் என்ற போர்வையில் தொடர்ந்து இந்து மதத்திற்க்கு எதிராக மட்டும் இந்து தெய்வங்களை அசிங்கப்படுத்தும் விதமாக இது போன்ற போஸ்டர்களை வெளியிடும் திரைப்படத்துறையினரை மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்து கடவுள் படத்தை போட்டது போல் மற்ற மத கடவுளின் படத்தை போட்டு பிச்சைகாரன் -2 என்ற வார்த்தையை போட முடியுமா? அதற்கு உங்களுக்கு துணிவு இருக்கிறதா? எதற்காக இந்துமத கடவுளை மட்டும் இழிவுபடுத்தும் வகையில் இது போன்ற போஸ்டர்களை வெளியிட்டு யாரை குளிர வைக்க பார்க்கிறீர்கள்? பணம் சம்பாதிக்க வேண்டுமென்றாலோ, விளம்பரம் தேடி கொள்ள ஆசைபட்டாலோ எத்தனையோ தொழில்கள் இருக்கும் பொழுது திரைப்படம் என்ற பெயரில் ஏன் இந்து சமயத்தை மட்டும் குறி வைத்து தாக்கப்பார்கிறீர்கள்?

இந்த போஸ்டரால் நாங்கள் உள்பட இந்துமக்கள் அனைவரும் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஆகவே இந்த சர்ச்சைக்குரிய போஸ்டரை வெளியிட்ட தங்கள் நிறுவனத்தின் சார்பில் ஒட்டுமொத்த இந்து மக்களிடம் உடனடியாக பத்திரிகை, தொலைகாட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தகுந்த விளக்கமும் மன்னிப்பும் கேட்க வேண்டும். இந்த போஸ்டரை உடனடியாக அகற்றவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இல்லையெனில் இந்து மக்கள் கட்சி சார்பாக விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனத்தின் மீதும், தங்கள் மீதும் சட்ட ரீதியாக வழக்கு தொடுப்போம் என்றும், மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என்றும்,பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தென் மாவட்டத்தில் உள்ளஎந்த தியேட்டரிலும் ஓட விடமாட்டோம் என்றும் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-இராமானுஜம்

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

சனி 31 ஜூலை 2021