மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

தெலுங்கில் ஒரே நாளில் மூன்று பெரிய படங்கள் ரிலீஸ்.. மோதலால் பரபரப்பு

தெலுங்கில் ஒரே நாளில் மூன்று பெரிய படங்கள் ரிலீஸ்.. மோதலால் பரபரப்பு

பெரிய ஹீரோக்களின் படங்கள் பண்டிகைத் தினத்திலேயே பெரும்பாலும் வெளியாகும். படத்தின் கலெக்‌ஷன், ரசிகர்கள் கொண்டாட்டம் ஆகியவற்றுக்கு பெஸ்டிவல் தினமே ஏற்றது. தமிழ் மட்டுமல்ல எல்லா மொழித் திரைப்படங்களுக்கும் இது பொருந்தும். தமிழைப் போலவே, இந்தக் கலாச்சாரம் தெலுங்கிலும் கடைபிடிக்கப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் உருவாகிவரும் பெரிய ஹீரோக்களின் படங்கள் அடுத்த வருட பொங்கல் தினத்தை டார்கெட் செய்துவருகின்றன. சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது.

பாகுபலி நாயகன் பிரபாஸ் , பூஜா ஹெக்டே நடிக்க ராதா கிருஷ்ணக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ராதே ஸ்யாம்’. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. அதோடு, படமானது அடுத்த வருட ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் விஜய்க்கு இருக்கும் ரெஸ்பான்ஸ் போல, தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு இருக்கிறது. இவருக்கு கடைசியாக வெளியான ‘சர்லேறு நீக்வெவ்வரு’ படம் பெரிதாகப் போகவில்லை. அவரின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது ‘சர்க்காரு வாரிபாட்டா’. தமன் இசையில், பரசுராம் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படமும் ஜனவரி 14 ரிலீஸை இலக்காகக் கொண்டு தயாராகிவருகிறது.

மலையாளத்தில் பிஜூ மேனன், ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட்டான படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் தற்பொழுது உருவாகிவருகிறது. இப்படத்தில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடித்துவருகிறார்கள். இப்படத்துக்கும் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கிறது. இந்தப் படமும் அடுத்த வருட ஜனவரிக்கு தான் ரிலீஸ்.

இப்படி, ஒரே நாளை டார்கெட் செய்து மூன்று பெரிய படங்கள் உருவாகிவருகிறது. சொன்னபடி, ஒரே நாளில் வெளியானால் திரையரங்குகள் கிடைப்பதில் துவங்கி கலெக்‌ஷன் வரை அனைத்துமே பாதிக்கப்படும். எப்படியும், எதாவது ஒரு படம் பின்வாங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, பின்வாங்காவிடிலும் சமரச பேச்சுவார்த்தைகளாவது நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

- ஆதினி

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

சனி 31 ஜூலை 2021