மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

ஆடித் தள்ளுபடியா? ஆயுள் தள்ளுபடியா? அப்டேட் குமாரு

ஆடித் தள்ளுபடியா? ஆயுள் தள்ளுபடியா? அப்டேட் குமாரு

ஆடித் தள்ளுபடியும் அதுவுமா இப்படி சொல்லாம கொள்ளாம கடையெல்லாம் மூடிட்டாங்களேனு பக்கத்து வீட்டு அக்கா யார்கிட்டயோ போன்ல செம டென்ஷனா திட்டிக்கிடிருந்தாங்க வர்ற சண்டே ரங்கநாதன் தெருவுக்கு போய் பர்ச்சேஸ் பண்ணலாம்னு ஐடியா வச்சிருந்தாங்களாம். போன வச்ச பிறகு அவங்கக்கிட்ட போய் ஆடித் தள்ளுபடிய பாத்தா ஆயுள் தள்ளுபடியாகிடும் பரவாயில்லையா... பேசாம வீட்லயே இருங்கனு சொன்னதுக்கு அந்த அக்கா முறைச்ச முறை இருக்கே... தாட்பூட் தமிழச்சினு ஒரு விருதே கொடுக்கலாம்

நீங்க அப்டேட் பாருங்க

Mannar & company

மனைவிகிட்ட அடிவாங்கி வலிக்காத மாதிரி நடிக்கிறவன் இடியாப்ப பரம்பரை,

அடியே வாங்காத மாதிரி நடிக்கிறவன் சார்பட்டா பரம்பரை!

PrabuG

என்னடா மூஞ்சு சோகமா இருக்கு. கண்ணு செவந்துருக்கு, குரல் அழுகுற மாதிரி இருக்கு.

காலையிலயே வண்டிக்கு பெட்ரோல் போட்டா அப்படிதாண்ணே இருக்கும்..

மயக்குநன்

கொரோனா உருமாறுவதை நம்மால் தடுக்க முடியாது!- சுகாதாரத்துறை செயலர்.

அரசியல்வாதிகள் கட்சி மாறுவது மாதிரிதான் போல..?

தர்மஅடி தர்மலிங்கம்

2ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன் என்று நான் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளேன்;- எடியூரப்பா.

ஹ்ம்ம்... நீங்க ரொம்ப நேர்மையானவரு சொன்னதை செஞ்சிட்ட்டீங்க.

ரஹீம் கஸ்ஸாலி

ஆகஸ்ட் 5 ஆம் தேதி கர்நாடக பாஜக வை எதிர்த்து தமிழக பாஜக உண்ணாவிரத போராட்டம்- அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர்

ஆட்டத்துல இது புது ரகமாவுல்ல இருக்கு!

பர்வீன் யூனுஸ்

நாட்டு மக்கள் கேக்கறது வேணா 'மன் கி பாத்' தா இருக்கலாம். எல்லா வீட்டு ஆம்பளைங்களும் கேட்டு நடக்கறது 'வுமன்' கி பாத் தான்...

ஷேக்பரித்

பங்க் ல வெரும் ரெண்டு,ரெண்டு லிட்டர் தாம்பா வண்டிக்கு பெட்ரோல் போட்டேன்..

அத பாத்த் வீட்டு புரோக்கர் ஈ.சி ஆர்ல வீடு விலைக்கு வருது வாங்குறிங்களானு கேட்குறான்பா..

balebalu

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.12.35 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது - மத்திய அரசு இட்லி விலையும் கோடி , செங்கல் விலையும் கோடி ! தமிழ்நாடு ஸ்பெஷல் ??

ச ப் பா ணி

கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் என்னை கடன்காரர் என்கின்றன வங்கிகள்!- விஜய் மல்லையா வருத்தம்.

கடன் குடுத்தது எப்ப..

நீ திருப்பிக் கட்டுனது எப்ப

மயக்குநன்

அதிமுக ஆட்சியில் தரிசு நிலத்திற்கு பயிர்க்கடன் வழங்கி ரூ.500 கோடி மோசடி!- அமைச்சர் ஐ.பெரியசாமி.

'பரிசு' நிலமா மாத்திட்டாங்க போல..?!

கோழியின் கிறுக்கல்!!

கேள்வி கடினமாக இருக்கக் கூடாது என்பதற்காக 'பெகாஸஸ் வாங்கினீர்களா, இல்லையா?' என்று கேட்டிருக்கிறார் ராகுல்!

அந்த 56 inchல் ஏதாவது ஒரு inchல் இருந்து பதில் வருகிறதா என்று பார்ப்போம்!!

-லாக் ஆஃப்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

சனி 31 ஜூலை 2021