மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் நபா நடேஷ்

பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் நபா நடேஷ்

தென்னிந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ராகுல் பிரீத் சிங் , ஆகியோர் ஏற்கனவே இந்தி திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனர் தற்போது தெலுங்கில் இளம் நடிகையாக வலம்வரும் நபா நடேஷ் அவர்களைப் போன்று இந்தி வலைதள தொடர் ஒன்றில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக நடிக்கவுள்ளார்

கன்னடத்தில் கடந்த 2015ல் வஜ்ரகயா என்கிற படம் மூலம் அறிமுகமான நபா நடேஷ். அதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கில் முக்கிய படங்களில் நடித்து வருகிறார். புகழ்பெற்றநடிகர் பிரகாஷ் பெலவாடியின் தியேட்டர் குரூப் வழியாக முறைப்படி நடிப்பு கற்றுக்கொண்டு நடிக்க வந்ததால் தெலுங்கு படவுலகில் சிறந்த பெர்பார்மர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். .

கடந்த இரண்டரை வருடங்களில் தெலுங்கில் அவர் நடித்த படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் மட்டும் 275 கோடி ரூபாய் என்கிறது வியாபார வட்டாரம்.

தற்போது முதன்முதலாக இந்தி வலைதள தொடரில் நடிக்க உள்ளார் நபா நடேஷ். இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் உருவாகும் வலைதள தொடர் ஒன்றில் தான் அவருக்கு ஜோடியாக தனி நாயகியாக நடிக்க ஆடிஷனில் சிறப்பாக நடித்து தேர்வாகி இருக்கிறார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் முதல் வெப்சீரிஸும் இதுதான்.

இராமானுஜம்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

சனி 31 ஜூலை 2021