மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

நடனப்புயல் படத்துக்கு டைட்டில் ‘பொய்க்கால் குதிரை’!

நடனப்புயல் படத்துக்கு டைட்டில் ‘பொய்க்கால் குதிரை’!

இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சனாக வலம்வருகிறார் பிரபுதேவா. நடிகர், நடன இயக்குநர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாக இருக்கிறார்.

பாலிவுட்டில் தொடர்ச்சியாகப் படங்களை இயக்கி வந்தாலும், தமிழ் சினிமாவில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க ‘ராதே’ வெளியானது. அதுபோல நடிகராக பிரபுதேவாவுக்கு கடைசியாக ‘தேவி 2’ ரிலீஸானது.

அடுத்ததாக, பிரபுதேவாவின் 50-வது படமாக பொன்மாணிக்கவேல் ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது. கொரோனா காரணத்தால் வெளியாக முடியாமல் தள்ளிப் போனது. எப்படியும், ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. சோனி லிவ் ஓடிடி தளம் இப்படத்தை கைப்பற்றியிருப்பதாகவும் ஒரு தகவல்.

தவிர, பிரபுதேவா கைவசம் தேள், யங் மங் சங் மற்றும் ஊமை விழிகள் படங்கள் தயாராகிவருகிறது. அதோடு, மஞ்சப்பை இயக்குநர் ராகவன் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருக்கிறது. அதோடு, யாமிருக்க பயமேன் படத்தை இயக்கிய டிகே இயக்கத்திலும் நடிக்கிறார்.

இந்த வரிசையில், புதிய படமொன்றிலும் நடித்துவருகிறார் பிரபுதேவா. அந்தப் படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார். இவர் யாரென்றால், ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கஜினிகாந்த், இரண்டாம் குத்து படங்களை இயக்கியவர்.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரைசா வில்சன் & வரலெட்சுமி சரத்குமார் நடிக்கிறார்கள். படத்துக்கு இசை டி.இமான். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 15 முதல் துவங்கி நடந்துவருகிறது.

யங் மங் சங் மாதிரி பிரபுதேவாவின் பட டைட்டில் வர வர வித்தியாசமாக இருக்கிறது. அப்படி, இந்தப் படத்துக்கு ‘பொய்க்கால் குதிரை’ என பெயர் வைத்திருக்கிறார்களாம்.

இந்திய சினிமாவே போற்றும் நடனப் புயல் பிரபுதேவா. பாடல்காட்சிகளில் இவர் கால்கள் போடும் ஸ்டெப்புக்கு ரசிகர்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள். அப்படியே முரணாக படத்துக்கு ‘பொய்க்கால் குதிரை’ என பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த டைட்டில் எடுபடுமா எனும் அச்சம் ஏற்படுகிறது. படத்தின் கதைப்படி, இந்த டைட்டில் நிச்சயம் படத்துக்கு ப்ளஸ்ஸாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 31 ஜூலை 2021