மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

சிவகார்த்திகேயனின் தெலுங்கு படத்தில் நாயகி இவரா?

சிவகார்த்திகேயனின் தெலுங்கு படத்தில் நாயகி இவரா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் தயாராகி வருகின்றன. அதோடு, அடுத்தடுத்து புதிய படங்களையும் கமிட் செய்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘டாக்டர்’. இந்தப் படம் மார்ச் 26ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டியது. தேர்தல், கொரோனா இரண்டாம் அலை எனத் தள்ளிப் போனதால் இன்னும் வெளியாகவில்லை. இந்தப் படம் ஓடிடியா அல்லது தியேட்டர் ரிலீஸா என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.

சமீபத்தில் படத்திலிருந்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக ட்விட் ஒன்றைத் தட்டியிருந்தார் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ராஜேஷ். படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டாக இருக்கலாம் எனப் பலரும் கருதுகிறார்கள். ஆனால், டாக்டரிலிருந்து நான்காவது சிங்கிள் வெளியாக இருக்காம். அதற்கான அப்டேட் என்று சொல்லப்படுகிறது.

நமக்குக் கிடைத்த தகவல்படி, டாக்டர் படம் நிச்சயமாக தியேட்டர் ரிலீஸ் மட்டுமே. ஓடிடியில் வெளியாக வாய்ப்பு குறைவு என்றே சொல்கிறார்கள்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படமும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படமும் தயாராகி வருகிறது. இதில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் அயலான் படமும், ஷூட்டிங் பணிகளில் டான் படமும் இருக்கிறது.

இந்த நிலையில், தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் முதல்கட்ட பணியாக நடிக நடிகையர்களை உறுதி செய்யும் வேலை தொடங்கியிருக்கிறதாம். அதன்படி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல்.

தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகிவிட்டார் ராஷ்மிகா. அதோடு, தமிழிலும் சுல்தான் படத்தின் மூலம் பரிச்சயமாகிவிட்டார். அதனால், ராஷ்மிகா சரியான தேர்வாக கருதுகிறது படக்குழு. விரைவிலேயே, பட அறிவிப்பும், படப்பிடிப்பும் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

கூடுதல் தகவலாக, இந்தப் படத்துக்காக முப்பது கோடி வரை சம்பளம் பெறுகிறார் சிவகார்த்திகேயன். தமிழுடன் ஒப்பிடும்போது, மிகப்பெரிய தொகையைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தீரன்

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

வெள்ளி 30 ஜூலை 2021