மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

அஜித் 62 ; போனிகபூர் கூட்டணியை உடைக்கும் அஜித் !

அஜித் 62 ; போனிகபூர் கூட்டணியை உடைக்கும் அஜித் !

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இந்த மூன்று நடிகர்களின் படங்கள் மட்டுமே மிகப்பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அது, ரஜினி, விஜய் மற்றும் அஜித். இந்த வருடத்திற்கான வசூல் வேட்டையில் விஜய்க்கு மாஸ்டர் வெளியாகிவிட்டது. தொடர்ந்து, தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’ ரிலீஸூக்கு தயார் நிலையில் இருக்கிறது. அதோடு, அஜித்துக்கு வலிமை படமும் இந்த வருடம் வெளியாக இருப்பது உறுதியாகியிருக்கிறது.

நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் கூட்டணியின் இரண்டாவது படமாக ‘வலிமை’ தயாராகிவருகிறது.

அஜித்துடன் ஹூமா குரேசி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். யுவன் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டது. இது, அஜித்தின் 60வது படம்.

வலிமை படமானது சென்ற வருடமே வெளியாகியிருக்க வேண்டியது. கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போய், வெளியாக முடியாமல் இருக்கிறது. இந்த மாதிரியான பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வராமல் தயாரிப்பாளர் கையில் இருந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளுமே, படத்தின் பட்ஜெட் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

இந்தப் படம் திரையரங்கில் வெளியானாலும், பெரிய வசூல் சாதனை நிகழ்த்தினாலும் தயாரிப்பு தரப்பு எதிர்பார்த்த வசூல் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. எப்படியும், தயாரிப்பாளருக்கு 30 கோடி வரை லாபம் குறையலாம். அதனால், மீண்டும் போனிகபூருக்கு படம் நடிக்க சம்மதம் தெரிவித்தார் அஜித்.

அப்படி, அஜித்தின் 61வது படத்தை ஹெச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து, மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி தொடர்கிறது.

இந்நிலையில், அஜித்தின் 62வது படத்தில் இந்த கூட்டணி உறுதியாக இருக்காது என்கிறது அஜித் தரப்பு. அஜித்தின் 62வது படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்காம். ஏற்கெனவே, அஜித்துக்கு விஸ்வாசம் படத்தை இந்நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநரும் புதியவராக இருப்பார் என்கிறார்கள். அஜித்துக்கு கதை சொல்லிவிட்டு காத்திருக்கும் இயக்குநர்களில் ஒருவராக இருக்கலாம் என்கிறார்கள். இயக்குநர் யாரென்பது இன்னும் முடிவாகவில்லையாம். அதோடு, அடுத்தவருட ஜனவரியில் இந்தப் படத்தை துவங்கவும் திட்டங்கள் போய்க் கொண்டிருப்பதாக தகவல்.

-தீரன்

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

5 நிமிட வாசிப்பு

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக  உத்தரவு!

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

2 நிமிட வாசிப்பு

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

வெள்ளி 30 ஜூலை 2021