மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

விக்ரம் படத்தில் கமல், ஃபகத், சேதுபதி கேரக்டர்கள் !

விக்ரம் படத்தில் கமல், ஃபகத், சேதுபதி கேரக்டர்கள் !

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையில் படம் உருவாகிறது. விஜய் நடிக்க மாஸ்டர் படம் பெரிய ஹிட்டானதால் லோகேஷின் விக்ரமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடிப்பது உறுதியாகிவிட்டது. சமீபத்தில் படத்துக்கான டெஸ்ட் போட்டோ ஷூட் நடந்துமுடிந்தது.

லோகேஷ் கனகராஜின் கதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கமர்ஷியல் கதைக்குள் புதிதாக ஒரு வெரைட்டியைக் கொடுத்துக் கொண்டிருப்பார். அப்படி, இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கேரக்டர்கள் குறித்து தெரியவந்துள்ளது.

என்னவென்றால், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் விஞ்ஞானியாக படத்தில் வருகிறாராம். அதோடு, முழுநேர வில்லனாக விஜய்சேதுபதி வருவார் என்று சொல்லப்படுகிறது. மாஸ்டரில் எப்படி வில்லனாக வந்தாரோ அதைவிட இன்னும் டெரரான ரோலில் இந்தப் படத்தில் சேதுபதி இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு, கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் சிக்கல் நிலவுவதால், விக்ரம் பட பணிகளில் கவனம் செலுத்திவருகிறார் கமல். ஷார்ட் டைமில் படப்பிடிப்பையும் முடித்துவிட திட்டமாம்.

விக்ரம் முடிந்த கையோடு, பாபநாசம் 2 & இந்தியன் 2 படங்களையும் இந்த வருடத்துக்குள் முடித்துவிட வேண்டுமென திட்டமிட்டிருக்கிறார் கமல். அதாவது, கொரோனா சிக்கல், இந்தியன் 2 வழக்கு என எல்லாம் முடிவுக்கு வந்தால் திட்டமிட்டபடி நடக்கும் என்கிறார்கள்.

-தீரன்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

வெள்ளி 30 ஜூலை 2021