மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஜூலை 2021

ராம் சரண் படத்துக்காக ஷங்கர் கொடுத்த உத்தரவாதம்!

ராம் சரண் படத்துக்காக ஷங்கர் கொடுத்த உத்தரவாதம்!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர். இவரின் கைவசம் மூன்று படங்கள் இருக்கின்றன.

கமல்ஹாசன் நடிக்க லைகா தயாரிக்கும் இந்தியன் 2, தில்ராஜூ தயாரிப்பில் ராம் சரண் நடிக்கும் படம் மற்றும் ரன்வீர் சிங் நடிக்க அந்நியன் ரீமேக். இதில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிந்துவிட்டது. தயாரிப்புத் தரப்புக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையேயான பனிப்போர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. சாதகமான தீர்வு வரும் எனவும், படப்பிடிப்பை விரைவில் தொடங்குவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 பிரச்னை பூதாகரமானதுக்கு காரணமே, ராம் சரண் பட அறிவிப்புதான். தில்ராஜூ இயக்கத்தில் ராம் சரணின் படத்தை இயக்குகிறார் ஷங்கர் என அறிவிப்பு வந்த பின்னரே, லைகா கொந்தளித்தது.

முதலில் இந்தியன் 2 முடித்துக்கொடுக்க வேண்டுமென நீதிமன்றத்தை நாடியது. இப்போது வரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அதோடு, ஷங்கருக்கும் அடுத்த படத்தைத் தொடங்குவதில் எந்த தடையும் இல்லை.

அதனால், ராம் சரண் படத்தின் முதல் கட்டப் பணிகளில் பிஸியாக இருக்கிறார் ஷங்கர். பொதுவாக, ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கு நீண்ட நாட்களை எடுத்துக்கொள்வார் ஷங்கர். அதிக மெனக்கெடலும், நீண்ட உழைப்பும் படத்தில் இருக்கும்.

ராம் சரண் படம் எப்போது படப்பிடிப்பு முடியும் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளருக்கும் வந்திருக்கிறது. ராம் சரண் படத்துக்கான தெளிவானத் திட்டங்களைக் கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர். இந்தப் படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருட சம்மருக்குள் முடித்துவிடுவதென உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம் ஷங்கர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஷங்கரை சந்திக்க ராம் சரண் சென்னை வந்திருந்தார். அதோடு, ஷங்கரின் மகளின் திருமணத்துக்கு வாழ்த்துகளையும் அன்பையும் பரிமாறிச் சென்றார். அதன் பிறகு, தில்ராஜூவையும், ராம் சரணையும் சந்திக்க ஹைதராபாத் சென்றார் ஷங்கர். அப்போதுதான், படப்பிடிப்பு , பட ரிலீஸ் வரையிலான திட்டங்களைக் கூறியிருக்கிறார் ஷங்கர்.

நமக்குக் கிடைத்த தகவல்படி, ஆகஸ்டில் படப்படிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. படத்தில் இரண்டு ரோல்களில் ராம் சரண் நடிக்கிறாராம். அதோடு, இவரின் 15ஆவது படமென்பதும் குறிப்பிடத்தக்கது. படத்துக்கான நடிகை இன்னும் முடிவாகவில்லை. அது உறுதியானதும், படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவதென திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.

-தீரன்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

வியாழன் 29 ஜூலை 2021