மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

ஒன்பது மாவட்டத்துல குடியுரிமை கிடைக்குமா? அப்டேட் குமாரு

ஒன்பது மாவட்டத்துல குடியுரிமை கிடைக்குமா? அப்டேட் குமாரு

ஐயா பெரியவங்களே...குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துடுச்சுனு சொன்னாங்க. எனக்கு பெரிய ஆசையெல்லாம் கெடையாதுங்க. தமிழ்நாட்ல 9 மாவட்டங்களுக்கு கிராமப்புறத்துல உள்ளாட்சித் தேர்தல் நடக்கப் போகுதுங்க. அதனால எனக்கு தற்காலிகமாக அந்த தேர்தல் நடக்குற வரைக்கும், 9 மாவட்டங்கள்ல ஒரு மாவட்டத்துல ரேஷன் கார்டையும் வாக்காளர் அடையாள அட்டையையும் மாத்திக் கொடுத்தீங்கன்னா கோடி புண்ணியமா போகும். இப்படிக்கு ஜனநாயகத்தை காப்பாத்தும் ஜாலி வாக்காளன்.

நீங்க அப்டேட்டை பாருங்க...

amudu

தகைசால் தமிழர்' பெயரில் புதிய விருது முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

விருது பெயரைப் பார்த்தால், அதை கமல் தான் சொல்லி இருப்பார்ன்னு நினைக்கிறேன்.

மெத்த வீட்டான்

பிரதமர் மோடியிடம் என்னென்ன பேசினோம் என்பதை அமித்ஷாவிடம் கூறினோம் - எடப்பாடி

அப்ப அமித்ஷாவிடம் சொல்ல வேண்டியதைத்தான் மோடியிடம் சொன்னிங்களா ?

amudu

புதிதாக ரூபாய் நோட்டு அச்சடிக்கும் திட்டம் இல்லை. -அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சுவிஸ் வங்கியில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை மீட்டு சமாளிப்பாங்க போல.

பர்வீன் யூனுஸ்

சருமம் சிவப்பாகும் என்ற நம்பிக்கையில் வாங்கி உபயோகித்து.. எதிர்பார்த்த பலன் கிடைக்காத போது, அந்த ஃபேர்னஸ் க்ரீமின் சாயம் 'வெளுத்து'ப் போகிறது.

ℳ𝐬𝐝✩இதயவன்✩

டெல்லியில் அடுத்த வாரம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடர்பாக புதிய அமைச்சரிடம் பேச உள்ளேன் ~ M.P ரவீந்திரநாத்

ஒரு லாரி லோடு செங்கல் இறக்கி காட்டுறேனா இல்லையான்னு பாரு?!

மயக்குநன்

வன்னியர் 10.5% ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்!- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

அறிவாலயத்துக்கும், தைலாபுர தோட்டத்துக்கும் இடையே பாலம் போடுற வேலை நடக்குற மாதிரி தெரியுதே..?!

balebalu

வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் 49 ஆயிரம் கோடி ரூபாய் கோரப்படாத தொகை உள்ளது : மத்திய நிதித்துறை இணை அமைச்சர் -

ATM சேவை கட்டணம் உயர்த்தி கொண்டே போகிறார்களே ? இந்த பணத்திலிருந்து அதை சரிக்கட்டி மக்களுக்கு சுமையை குறைக்கலாமே

ஜோக்கர்...

நயவஞ்சகத்தையும், ஏமாற்றுவதையும் "சாதுர்யம்" என கொண்டாடும் உலகில்,

நேர்மையயும், நியாயத்தையும் "ஏமாளித்தனம்" என கூறுவதில் ஆச்சரியமில்லை..!!!

-யதார்த்தம்

Mannar & company

அதிமுகவை மீட்கணும்னு அடிக்கடி டிடிவி தினகரன் சொல்றாரே ஏன்ணே!?

அதுவா.. ஓபிஎஸ், இபிஎஸ் டெல்லில போய் அடகு வச்சதத்தான் மீட்கணும்னு சொல்றாரு

மயக்குநன்

இருட்டு அறையில் கருப்பு பூனையைத் தேடுகிறார் எடப்பாடி பழனிசாமி!- அமைச்சர் துரைமுருகன்.

அறை இருட்டானதுக்கு காரணம் அணில்தானே..?!

ச ப் பா ணி

எல்லா இனிப்பையும்

குற்ற உணர்ச்சியுடன் சாப்பிடுகின்றனர்

"சுகர் இருப்பவர்கள்"!

மயக்குநன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை!- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்.

மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வேலை செய்யுது போல..?!

கோழியின் கிறுக்கல்!

இதே வேகத்தில் கொரோனா உருமாறிக் கொண்டிருந்தால் Greek albhabets முடிந்து,

தமிழ் அ, ஆ, இ, ஈ, யில் வந்து நிற்கப் போகிறது!?

-லாக் ஆஃப்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

3 நிமிட வாசிப்பு

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

புதன் 28 ஜூலை 2021