மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

அதிகபட்ச அறுவடைக்கு தயாராகும் ஜெய்பீம்!

அதிகபட்ச அறுவடைக்கு தயாராகும் ஜெய்பீம்!

கூட்டத்தில் ஒருத்தன்' படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தனது 39ஆவது படத்தில் நடித்துள்ளார். சூர்யா பிறந்தநாளன்று இந்தப் படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தின் தலைப்பு வெளியானது. படத்திற்கு ஜெய் பீம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. சான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

ஜெய் பீம் படத்தின் போஸ்டர்களில் சூர்யா வழக்கறிஞர் உடையில் காணப்படுகிறார். மேலும் பழங்குடியின மக்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் ஜெய் பீம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.

உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யா இருளர், பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த படத்தை வலைதளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் ரீதியாக சர்ச்சைகளை சந்திக்கும் அல்லது எதிர்ப்புகள் ஏற்படலாம் என கருதக்கூடிய திரைப்படங்களை வெளியிடக்கூடிய தளமாக வலைதளங்கள் இன்றைக்கு தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் உள்ளது. படம் பற்றிய எதிர்பார்ப்பு, எதிர்ப்புகள் அதிகரிக்க தொடங்குகிறபோது அந்த படத்தின் சந்தை மதிப்பு கூடுதலாகிறது. இது பிரபலமானவர்கள் தயாரிக்கும், அல்லது நடிக்க கூடிய படங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வழிவகுக்கிறது.

திரையரங்குகள் ஆகஸ்ட் மாதம் திறக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் திரையரங்கங்களை மூடுவது திறப்பது என ஆடு புலி ஆட்டத்தில் சிக்கியுள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதம் திறக்க அனுமதி கிடைத்தாலும் கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தல் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே திரையரங்குகளுக்கு இருக்கும்.

திரைப்படங்கள் ரீலீசுக்கான திட்டமிடல் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டால் மட்டுமே தியேட்டர்கள் திறக்கப்படும் அன்று புதிய படங்கள் திரையிட முடியும். அதற்கான ஒருங்கிணைப்பு தமிழ் சினிமா சம்பந்தபட்ட சங்கங்களில் இல்லை.

முன்னணி தயாரிப்பாளர்களே வலைதளங்களுக்கு புதிய படங்களை வாங்கி தரும் பொறுப்புகளில் இருப்பதால் தியேட்டர் ரீலீஸ் லாபகரமாக இல்லை என்று தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் அறிவுறுத்தி மூளை சலவை செய்யும் வேலைகளை செய்து வருகின்றனர் என்கிற புதிய குற்றசாட்டு எழுந்துள்ளது.

இப்படி ஒரு குழப்பமான நிலையில் "ஜெய்பீம்" படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட முடியாத சூழல் நிலவுகிறது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட அன்றே படத்துக்கான எதிர்பார்ப்பு உலகம் முழுமையும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது .

இந்த சாதகமான நிலைமையை வணிக ரீதியாக அணுகவே தயாரிப்பாளர்கள் எதிர்கொள்வார்கள் என்பதால் படத்தின் தயாரிப்பு செலவில் இருந்து பல மடங்கு விலைக்கு" ஜெய்பீம்" படம் வியாபாரமாக கூடிய வாய்ப்பு அதிகரித்திருக்கிறது என்பதே தமிழ்சினிமா வர்த்தக வட்டாரத்தின் கணிப்பாக உள்ளது .

- இராமானுஜம்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

புதன் 28 ஜூலை 2021