மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

ஹிப் ஆப் தமிழன் ஆதி காட்டில் அடைமழை

ஹிப் ஆப் தமிழன் ஆதி காட்டில் அடைமழை

இசையமைப்பாளர்களில் கதாநாயகன் அவதாரம் தரித்தG.V.பிரகாஷ் அதிகப்படங்களில் நடித்திருந்தாலும், வணிகரீதியான வெற்றி என்பது அவருக்கு இன்றுவரை வசப்படவில்லை.

தமிழ்த்திரையுலகுக்கு ஹிப்ஹாப் தமிழனாக அறிமுகமானஆதி கதாநாயகனாக நடித்து இயக்கிய முதல் படம் மீசையை முறுக்கு வணிகரீதியாக வெற்றிபெற்ற படம். அதனை தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகியபடங்கள் அவர் கதாநாயகனாக நடித்து வெளியாகியிருக்கின்றன. பெரும்வெற்றி இல்லை என்றாலும் முதலுக்கு மோசம் செய்யாத படங்களாகும். அதன் காரணமாக இசையமைப்பாளர் என்பதை காட்டிலும் கதாநாயகன் வாய்ப்புகள் குவிந்து வருகிறது ஆதிக்கு.

அவர் இப்போது, சிவகுமாரின் சபதம் அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும் வருகிறார்.இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். மீசைய முறுக்கு படத்திற்குப் பிறகு ஆதி இயக்கும் படம் இது. இதில் ஆதிக்கு ஜோடியாக மாதுரி நடிக்கிறார்.

அஸ்வின்ராம் என்பவர் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன், நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், படத்தொகுப்பாளராக ப்ரதீப் ராகவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இவ்விரு படங்களும் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கின்றன.இவற்றில் சிவகுமாரின் சபதம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அன்பறிவு படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்திருக்கிறது.

இந்நிலையில், இப்படங்களுக்கு பின் ஆதியே இயக்கி நடிக்கும் படம் குறித்த பேச்சுகள் நடந்துவந்தன.அப்படத்தை சத்யம் சினிமாஸ் நிறுவனத்தினர் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. சம்பளம், பட்ஜெட் காரணங்களால் அந்தப்பட தயாரிப்பு முடிவுக்கு வரவில்லை, எனவே ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படத்தையும் சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. மரகதநாணயம் பட த்தை இயக்கியஇயக்குநர் சரவண், ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வஅறிவிப்பு வெளியிடப்படலாம் என்கின்றனர்.

-இராமானுஜம்

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

புதன் 28 ஜூலை 2021