மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து பிரைம் ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவிட்டது. குத்துச்சண்டை போட்டிகளை மையமாகக்கொண்டு உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

எமர்ஜென்ஸி காலக்கட்டம், அதற்குள் திமுக - அதிமுக அரசியல், சாதிய அரசியல், தலித் பிரச்னை எனப் பல விஷயங்களை ஸ்போர்ட்ஸ் டிராமாக்குள் பேசி அசத்தியிருக்கிறார் பா.ரஞ்சித்.

ரங்கன் வாத்தியாராக பசுபதி, கபிலனாக ஆர்யா, வேம்புலியாக ஜான் கொக்கன், கெவின் டேடியாக ஜான்விஜய், மாரியம்மாவாக துஷாரா நடிப்பில் அசத்தியிருந்தார்கள். அதோடு, இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கேரக்டருமே மக்கள் மத்தியில் பிரபலமானது. டான்ஸிங் ரோஸ், பீடி வாத்தியார், டைகர் கார்டன், மீரான் என சொல்லிக் கொண்டே போகலாம்.

குறிப்பாக, ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதியைக் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தில் ரங்கன் வாத்தியாராக நடிக்க முதலில் சத்யராஜிடம்தான் பேசியிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். அந்த நேரத்தில் வேறு சில படங்களில் சத்யராஜ் பிஸியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. அதன்பிறகே, இந்த வாய்ப்பு பசுபதிக்கு வந்திருக்கிறது.

ரங்கன் வாத்தியாராக பசுபதி அசத்தியிருந்தார். ஒருவேளை சத்யராஜ் நடித்திருந்தாலும் புதுவித அனுபவமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்தில் ஆர்யா-சயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதனால், ஆர்யாவுக்கு வாழ்த்துகள் சொன்ன அழைப்பேசியில் அழைத்தாராம் சத்யராஜ். அப்போது, ரங்கன் வாத்தியார் ரோலில் நடிக்காமல் தவறவிட்டதை நினைத்து ஃபீல் செய்திருக்கிறார் சத்யராஜ்.

- தீரன்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

3 நிமிட வாசிப்பு

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

திங்கள் 26 ஜூலை 2021