மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

கமல் மகனாக நடிக்கும் பிரபல நடிகரின் மகன்!

கமல் மகனாக நடிக்கும் பிரபல நடிகரின் மகன்!

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நம்பிக்கைக்குரிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நம்பிக்கைக்குரியவர் என்பதற்கு காரணம், கதைக் கேட்காமலேயே படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்களும், நடிப்பதற்கு நடிகர்களும் ஒப்புக் கொள்வார்கள். அப்படியான நம்பிக்கையை கைதி, மாஸ்டர் படங்களின் மூலம் ஏற்படுத்திவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

அடுத்ததாக, கமல்ஹாசன் நடிக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் உருவாகிவருகிறது விக்ரம். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு துவங்கி நடந்துவருகிறது.

முதல் கட்டமாக கமலுடன் நடிக்கும் காட்சியில் விஜய்சேதுபதி கலந்துகொண்டார். சமீபத்தில் ஃபகத் ஃபாசில் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்திருக்கிறார். நரேன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஹீரோ கமலுக்கு எதிராக பல நெகட்டிவ் கேரக்டர்கள் படத்தில் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் கமல் பார்வை சவால் கொண்ட கேரக்டரில் வருவார் என்றும் படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு, மாஸ்டர் படத்தில் நடித்த சிபி இந்தப் படத்திலும் ஒரு கேரக்டர் நடிக்கிறாராம்.

கூடுதலான, இன்னொரு புது அப்டேட்டும் கிடைத்திருக்கிறது. கமல்ஹாசனின் மகன் ரோலில் காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில், பாவக்கதைகள் ஆந்தாலஜியில் தங்கம் கேரக்டரில் அசத்தினார் காளிதாஸ். இந்தப் படத்துக்குப் பிறகு, தமிழில் பல வாய்ப்புகள் குவிந்துவருகிறது.

மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் ஜெயராம். பஞ்சதந்திரம், தெனாலி, உத்தமவில்லன் என கமல்ஹாசனுடன் தொடர்ந்து டிராவல் செய்பவர் ஜெயராம். அதுமட்டுமல்ல, இன்றுவரையிலும் புதிய கதை குறித்து ஜெயராமுடன் விவாதிப்பார் கமல்.

தற்பொழுது, ஜெயராமின் மகனுக்கு விக்ரம் படத்தில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் கமல் என்று சொல்லப்படுகிறது.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 26 ஜூலை 2021