மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஜூலை 2021

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் சிம்பு

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் சிம்பு

சிம்புவுக்கு இந்த வருட ஓபனிங் படமாக ‘ஈஸ்வரன்’ அமைந்தது. சுசீந்திரன் இயக்கத்தில் ஷார்ட் டைமில் படத்தை நடித்துக் கொடுத்து படமும் வெளியானது.

சுசீந்திரன் படத்துக்குப் பிறகு சிம்புவுக்கான வரவேற்பு ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையுலகிலும் நிலவுகிறது. ஏனெனில், பழைய மாதிரி இல்லாமல், படப்பிடிப்பில் சிம்பு தவறாமல் கலந்துகொள்வதும், படத்தை சொன்ன தேதியில் முடித்துக் கொடுப்பதுமாக சினிமாவில் பிஸியாகிவிட்டார். அதற்கு கச்சிதமான சான்று மாநாடு.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் அரசியல் திரைப்படமாக உருவாகிவருகிறது மாநாடு. இந்தப் படத்துக்கு பெரும் பொருட்செலவில் அரசியல் மாநாடு செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. படத்திலிருந்து முதல் சிங்கிள் கூட வெளியாகி வைரலானது. திரையரங்கில் வெளியிட வேண்டுமென படக்குழு சரியான தருணத்துக்கு காத்திருக்கிறது.

மாநாடு முடிந்த கையோடு ‘பத்து தல’ படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் இது. இந்தப் படத்தை ஜில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், கெளதம் மேனன் படத்தில் முதலில் நடிக்கிறாராம் சிம்பு.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்க இருக்காம். இந்தப் படப்பிடிப்பு 20 நாட்கள் நடக்க இருக்கிறதாம். அது முடிந்ததும் கையோடு, ‘பத்து தல’ படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.

அதன்பிறகு, ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் முடித்துக் கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் சிம்பு. இதில் எந்த சிக்கலும் வராது, வரக்கூடாது என்கிறது சிம்பு வட்டாரத்தினர்.

பொதுவாக, சிம்புவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஒன்றொன்றாக உடைத்து நொறுக்கிவருகிறார் நியூ சிம்பு.

- தீரன்

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

2 நிமிட வாசிப்பு

யோகிபாபுவுக்கு நன்றி சொன்ன விவேக் மகள்!

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: கோலி அணியை வீழ்த்திய டோனி அணி!

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

3 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசுக்கு பயப்படும் விஜய்: தயாரிப்பாளர் கே.ராஜன்

திங்கள் 26 ஜூலை 2021