மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

தர்பார் படத்துக்குப் பிறகு ரஜினியின் அடுத்த ரிலீஸ் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இமான் இசையில் படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

ரஜினி நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ தீபாவளி ஸ்பெஷலாக வருகிற நவம்பர் 04ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ரஜினியின் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஜினியின் அடுத்தப் படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் என்றும், படத்தை பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

அமெரிக்காவிற்கு மருத்துவ பரிசோதனைக்காகச் சென்ற ரஜினி, சென்னை திரும்பியதும் புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், ரஜினியின் புதிய படம் குறித்து எந்த சத்தமும் இல்லை. என்ன விஷயமென்று விசாரித்தால் புதுத் தகவல் கிடைத்தது.

ஏற்கெனவே, ஷங்கர் இயக்க 2.O படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் தயாரிக்க வேண்டியது. ஷங்கர் சொன்ன பட்ஜெட்டினால் படத் தயாரிப்பிலிருந்து விலகியது. இந்நிலையில், தேசிங்கு பெரிய சாமி சொன்ன பட்ஜெட் தற்பொழுது ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு சிக்கலை உருவாக்கியிருக்காம்.

தேசிங்கு பெரியசாமி சொன்ன கதை பீரியட் திரைப்படமாம். அதற்கான படப்பிடிப்புக்கே பெரும் தொகை செலவாகுமாம். படத்துக்கான மொத்த பட்ஜெட் எவ்வளவாகும் என கணக்குப் போட்டுப் பார்த்திருக்கிறது தயாரிப்பு தரப்பு. படப்பிடிப்புக்கு மட்டும் நூறு கோடிக்கு மேல் செலவாகும் என்று சொல்லப்படுகிறது. இதோடு, ரஜினியின் சம்பளம் நூறு கோடியும் சேர்த்தால் படத்தின் பட்ஜெட் எங்கேயோ போய்விடும்.

இந்த கொரோனா காலக்கட்டத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் படத்தைத் தயாரிக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் விரும்பாது. ஏ.ஜி.எஸ் நிறுவனமும் உறுதியாக இதை மறுத்துவிட இருக்கிறதாம். ஒருவேளை ரஜினியின் சம்பளம் குறைக்கப்பட்டாலோ அல்லது படத்தின் கதை மாற்றப்பட்டாலோ இந்தப் படத்தினை தயாரிக்க ஏஜிஎஸ் முன்வரலாம் என்கிறார்கள்.

ரஜினி கேட்டு ஓகே சொன்ன கதையை மாற்றுவார்களா என்பதும் தெரியவில்லை. இந்த சர்ச்சைக்கு ரஜினியின் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லையாம். இப்போதைக்கு ‘அண்ணாத்த’ படம் வெளியாகட்டும், மீதியெல்லாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று இருக்கிறார்களாம்.

- தீரன்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

3 நிமிட வாசிப்பு

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ஞாயிறு 25 ஜூலை 2021