மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

சினேகனுக்குத் திருமணம்!

சினேகனுக்குத் திருமணம்!

கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்து வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றிய பின்பு புத்தம் புது பூவே திரைப்படம் மூலம் திரைத்துறைக்குப் பாடலாசிரியராக அறிமுகமானவர் சினேகன்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க பாடலாசிரியராக இருக்கும் சினேகன் திருமணம் ஜூலை 29 அன்று நடைபெற உள்ளது. பாடலாசிரியராகத் திரைத்துறைக்குள் தன் பயணத்தைத் தொடங்கிய சினேகன் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்காரியாப்பட்டி என்ற குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் எட்டாவது வாரிசாகப் பிறந்தவர், 700க்கும் அதிகமான படங்களுக்கு 2,500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் சினேகன், நடிகர் - இயக்குநராக சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். மறைந்த சசிகலா நடராஜனுக்கு நெருக்கமான சினேகன் அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருமுறை விண்ணப்பித்தும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியபோது மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியிலும், சட்டமன்றத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டார். கன்னிகா என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ள தகவலை கவிஞர் சினேகன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், இந்த தகவலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, 'கவிஞர் சினேகன் கட்சித் தலைமையகம் வந்து தனது திருமண அழைப்பிதழ் அளித்தார் மறைந்த எம்.என் (சசிகலா நடராஜன்) மூலம் அறிமுகமானவர். இனிய நண்பர் ஜூலை 29 அன்று செல்வி கன்னிகாவுடன் இல்லறமேற்கும் அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

-இராமானுஜம்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

ஞாயிறு 25 ஜூலை 2021