மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

ஆபாச பட வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா?

ஆபாச பட வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா?

சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களையும், மாடல் அழகிகளையும் ஆபாச படங்களில் நடிக்க வைத்து அவற்றை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்த புகாரில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி இருப்பது நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி பட உலகில் ஷில்பாவுக்கு தெரியாமல் இது எப்படி நடந்திருக்கும் என்கிற பேச்சுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ராஜ்குந்த்ராவை போலீஸ் காவலில் எடுத்து ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா? அல்லது அவருக்கு தெரியாமலேயே ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்தாரா? அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து மும்பை இணை கமிஷனர் மிலிந்த் பரம்பே கூறுகையில், ஆபாச பட வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா? என்று இதுவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

தனது கணவர் கைது செய்யப்பட்டு காவல்துறையின் விசாரணையில் இருக்கும் நிலையில் ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புத்தகத்தின் பக்கத்தை பகிர்ந்துள்ளார். அது எழுத்தாளர் ஜேம்ஸ் தர்பரின் புத்தகம் ஆகும். " கோபத்தில் திரும்பிப்பார்க்க வேண்டாம் அல்லது பயத்தில் முன்னோக்கிப் பார்க்க வேண்டாம். ஆனால் சுற்றி விழிப்புணர்வுடன் இருங்கள். நான் உயிருடன் இருப்பதற்கு அதிர்ஷ்டசாலி என்பதை அறிந்து ஆழ்ந்த மூச்சு விடுகிறேன். நான் கடந்தகால சவால்களில் இருந்து தப்பினேன். எதிர்காலத்தில் சவால்களில் இருந்து தப்பிப்பேன். இன்று என் வாழ்க்கையை வாழ்வதில் இருந்து என்னை திருப்ப எதுவும் தேவையில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு மட்டுமல்ல தனது கணவர் ராஜ்குந்த்ராவுக்கும் ஆபாச படத் தயாரிப்பில் தொடர்பு இல்லை. ஹாட் ஷாட்ஸ் ஆபாச செயலியின் உள்ளடக்கங்கள் குறித்த விவரங்கள் ஏதும் தனக்கு தெரியாது என்று ஷில்பா ஷெட்டி கூறியது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

சனி 24 ஜூலை 2021