மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

ஒரு மொழியில் டாப் கியரில் போய்க் கொண்டிருக்கும் நடிகர்கள், மற்ற மொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். தெலுங்கிலிருந்து மகேஷ்பாபு ‘ஸ்டைபர்’ மூலமாக அறிமுகமானார். தற்பொழுது, நடிகர் அல்லு அர்ஜூன் ‘புஷ்பா’ படம் மூலமாக தமிழுக்கு வருகிறார்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வருவது போல, தமிழின் முக்கிய நடிகர்கள் தெலுங்கு சினிமாவுக்கு படையெடுத்துவருகிறார்கள். சமீபத்தில் விஜய்சேதுபதி நடிக்க தெலுங்கில் வெளியான ‘உப்பென்னா’ செம ஹிட்டானது. அந்தப் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு, விஜய்சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ். அதனால், தெலுங்கில் உருவாகும் படங்களில் விஜய்சேதுபதிக்கென தனிக் கதையே எழுதுகிறார்களாம் தெலுங்கு இயக்குநர்கள்.

சமீபத்தில் தனுஷூம் தெலுங்கு சினிமாவுக்குச் செல்வதை அறிவித்தார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்தப் படத்துக்காக பெரும் தொகையை சம்பளமாகப் பெற்றிருக்கிறார் தனுஷ்.

விஜய்சேதுபதி, தனுஷ் வரிசையில் சிவகார்த்திகேயனும் தெலுங்கு சினிமாவுக்குள் நுழைகிறார். தெலுங்கு - தமிழ் பைலிங்குவலாக உருவாகும் இப்படத்துக்கான சம்பளப் பேச்சுவார்த்தை தற்பொழுது நடந்துவருகிறதாம். சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து 30 கோடி சம்பளம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தயாரிப்பு தரப்பானது 27 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்துவருகிறதாம்.

தமிழ் சினிமாவை ஒப்பிடும்போது தெலுங்கு சினிமாவில் நடிக நடிகைகளின் சம்பளங்கள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். தமிழில் விஜய்சேதுபதியும், தனுஷூம் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு மடங்கு அதிகமாகவே தெலுங்கில் வாங்குவார்கள். மிகப் பெரிய சம்பளத்துக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பார்கள். அதனால், சிவகார்த்திகேயனுக்கான சம்பள பேச்சுவார்த்தையானது விரைவில் நல்ல முடிவு எட்டும் என்று சொல்லப்படுகிறது. எப்படியும், தயாரிப்பு தரப்பானது இறங்கிவந்துவிடும் என்றே சொல்கிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு நெல்சன் இயக்கத்தில் டாக்டர் ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது. ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ இந்த வருட இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதோடு, சிபிசக்கரவர்த்தி எனும் புதுமுக இயக்குநரின் ‘டான்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஆதினி

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

3 நிமிட வாசிப்பு

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

சனி 24 ஜூலை 2021