மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய்

இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக பளு தூக்குதல் போட்டியில் வெள்ளியை வென்று கொடுத்துள்ள மீராபாய் சானுவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 24) மகளிருக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது.

ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி மீராபாய் வெள்ளி பதக்கம் வென்றார். இதில், 210 கிலோ எடையை தூக்கி சீனாவை சேர்ந்த ஹோ சி ஹூய் தங்க பதக்கத்தை வென்றார். 2000 ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலம் வென்றிருந்த நிலையில், இரண்டாவதாக தற்போது மீராபாய் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அதன்படி, ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்த மீராபாய் சானுவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

”டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இதைவிட ஒரு மகிழ்ச்சியான தொடக்கம் இருக்க முடியாது. மீராபாய் சானுவின் சிறப்பான செயல்பாடுகளால் இந்தியா உற்சாகமடைந்துள்ளது. வெள்ளி பதக்கம் வென்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்கப்படுத்தும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெள்ளி பதக்கம் வென்று, இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்த மீராபாய் சானுவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சர்களும் மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

-வினிதா

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

சனி 24 ஜூலை 2021