மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

சுந்தரா டிராவல்ஸ் 2 ; முரளி& வடிவேலுவை மிஞ்சுமா யோகிபாபு காமெடி ?

சுந்தரா டிராவல்ஸ் 2 ; முரளி& வடிவேலுவை மிஞ்சுமா யோகிபாபு காமெடி ?

முரளி மற்றும் வடிவேலுவின் அட்டகாச காமெடி அதகளத்துடன் 2001ல் வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். டப்பா பஸ்ஸை வைத்துக் கொண்டு இருவரும் செய்யும் காமெடிகள் இப்போதும் மீம் டெம்ப்ளேட்டுகளாகிவருகிறது.

குறிப்பாக, டாம் & ஜெர்ரி காமெடியை லைவ்வாக திரையில் இந்த கூட்டணி நிகழ்த்திக் காட்டியது. வடிவேலுவின் காமெடிகளுக்கு மாற்று என எதுவும் கூறிவிட முடியாது.

சமீபத்தில் ஹிட்டான பழைய படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகிவருகிறது. அப்படி, சுந்தரா டிராவல்ஸ் படத்தின் பாகம் 2 உருவாக இருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதாக தகவல். அதோடு, முரளி & வடிவேலு கதாபாத்திரங்களில் கருணாகரன் & யோகிபாபு இருவரும் நடிக்க இருக்கிறார்கள். கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால், முதல் பாகத்தை இயக்கிய அசோகன் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருக்கிறார்.

மலையாளத்தில் வெளியான 'ஈ பறக்கும் தளிகா' படத்தின் ரீமேக் தான் சுந்தரா டிராவல்ஸ். மலையாளத்திலும் அசோகன் தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டைட்டில் மட்டுமே சுந்தரா டிராவல்ஸ். ஆனால், முழுக்க முழுக்க வேறு ஒருகதைக்களமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு காலத்தில் முரளி & வடிவேலு கூட்டணியில் வெளியான எல்லா காமெடியுமே செம ரீச். குறிப்பாக, வடிவேலுவின் காமெடிக்கு இணையாக யோகிபாபுவின் காமெடி இருக்குமா? வடிவேலுவை மறக்கடிக்கும் காமெடியைத் தருவாரா என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

-ஆதினி

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

சனி 24 ஜூலை 2021