மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

நேற்று ‘எதற்கும் துணிந்தவன்’, இன்று ‘ஜெய்பீம்’ !

நேற்று ‘எதற்கும் துணிந்தவன்’, இன்று ‘ஜெய்பீம்’ !

ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் ஒரு நடிகரை , ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்களென்றால் அது சூர்யா. அவரின் பிறந்த தின ஸ்பெஷலாக அடுத்தடுத்து இரண்டு அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் பிறந்த தின ஸ்பெஷலாக நேற்று மாலையே சூர்யாவின் 40வது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. பாண்டிராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ எனும் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடித்திருக்கிறார். இமான் இசையில் படத்திலிருந்து மினி டீஸரும் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

அடுத்ததாக, சூர்யா நடிப்பில் உருவாகிவரும் 39வது படத்தை கூட்டத்தில் ஒருத்தன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கிவந்தார். இப்படத்தில் வக்கீல் ரோலில் சூர்யா நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ‘ஜெய்பீம்’ என பெயரிட்டுள்ளனர். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வக்கீல் கெட்டப்பில் சூர்யா இருக்கும் புகைப்படம் அதில் இடம்பெற்றுள்ளது. இந்தப்படத்தில் ரஷிஜா விஜயன் லீட் ரோலில் நடித்திருக்கிறார்.

அடுத்தடுத்த இரண்டு அப்டேட்டுகளால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த வரிசையில் சூர்யாவின் 41வது படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். தாணு தயாரிப்பில் ‘வாடிவாசல்’ எனும் பெயரில் உருவாக இருக்கிறது. தொடர்ந்து, சூர்யா 42 படத்தை இயக்குநர் சிவா கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் கமர்ஷியல் ஹீரோவாக ஹிட் கொடுத்துவருகிறார். இன்னொரு பக்கம், சமூக அக்கறையுடன் மக்களுக்கான பணிகளிலும் ஈடுபடுகிறார். பிற நடிகர்களைப் போல கோடியில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஈசிஆரில் வீடு என இல்லாமல் மக்களுக்காக கருத்து தெரிவிப்பது, அகரம் மூலமாக கல்வி சேவையாற்றுவதெனவும் இயங்கிவருகிறார். இதுவே, சூர்யாவை ரசிகர்கள் கொண்டாட கூடுதல் காரணம்.

சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர். 1997ல் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிக்கும் போது ஆடத்தெரியாமல், நடிப்பதில் கூச்சம் என இருந்தவர், இப்போது அப்படியே நேரெதிராக மாறியிருக்கிறார். நடிப்பிலும், நடனத்திலும், ஃபர்பாமென்ஸிலும் நேர்த்தியைக் காட்டிவருகிறார்.

கமர்ஷியல் மாஸ் படங்கள் மட்டுமின்றி, குழந்தைகளுக்கான , குடும்பங்களுக்கான, பெண்களுக்கான படங்களும் வெளிவரவேண்டுமென்று 2டி நிறுவனத்தைத் துவங்கினார். தொடர்ச்சியாக, நல்ல திரைப்படங்களையும் தயாரித்துவருகிறார் சூர்யா. பசங்க, 36வயதினிலே, ராட்சசி மற்றும் சூரரைப் போற்றுப் படங்களைக் குறிப்பிடலாம். அப்படி வெளியான, சூரரைப் போற்று ஆஸ்கர் வரை சென்றது. சிறந்த நடிகருக்கான பிரிவில் சூர்யா பெயர் இடம் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

நந்தா, பிதாமகன், கஜினி, சிங்கம், வாரணம் ஆயிரம் படங்களெல்லாம் சூர்யா திரையுலகில் வீழ்ச்சியை சந்தித்தப் போதெல்லாம் திருப்புமுனையாக அமைந்தப் படங்கள். அதனாலேயே, பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி மற்றும் கெளதம் மேனன் மீது சூர்யாவுக்கு எப்போது கூடுதல் மரியாதை உண்டு. இவர்கள் எப்போது அழைத்தாலும் யோசிக்காமல் ஓகே சொல்வார் சூர்யா.

மணிரத்னத்துக்காக கெளதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ ஆந்தாலஜியில் நடித்திருக்கிறார். நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் இவரின் கதைக்காக ரசிகர்கள் வெயிட்டிங். அமைதியானவர் ஆனால், நடிப்பில் அசாத்தியமான அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். ஹேப்பி பர்த்டே சூர்யா!

-ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 23 ஜூலை 2021