மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

ஷங்கர் படத்தில் இரண்டு நாயகிகள்!

ஷங்கர் படத்தில் இரண்டு நாயகிகள்!

முதன்முறையாக ஷங்கர் இயக்க உள்ள தெலுங்கு படத்தின் வேலைகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளன.

இந்தியன்-2 படம் பற்றிய எந்த தகவலும் இல்லை. ஆனால், ஷங்கர் இயக்கத்தில் பெயரிடப்படாத ராம் சரண் நடிக்க உள்ள படத்தின் தகவல்கள் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தினந்தோறும் கசியவிடப்படுகின்றன.

ஷங்கர் - ராம்சரண் கூட்டணி என்பதால் படத்துக்கான பட்ஜெட் அதிகம். அதேபோன்று படத்துக்கான எதிர்பார்ப்பு விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி மற்றும் பிற கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்திலும் பிரபலமானவர்களைத் தேர்வு செய்து வருகின்றனர். படத்தில் இரண்டு கதாநாயகிகள். அதில் ஒருவர், சுல்தான் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறார்.

குறுகிய காலத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்த நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட படங்களில் நடித்து வந்த இவர் கீதா கோவிந்தம், தேவதாஸ், டியர் காம்ரேட், ஸ்ரீலேரு நீக்கவரு, பீஷ்மா படங்களில் தெலுங்கு முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ள புஷ்பா தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஆலியா பட் அல்லது கியாரா அத்வானி நடிக்கலாம் என்று தெரிகிறது. ஆடி மாதம் முடிவடைந்தவுடன் விரைவில் படத்தின் பூஜை பிரமாண்டமாக நடக்க உள்ளது.

-இராமானுஜம்

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

வெள்ளி 23 ஜூலை 2021