மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

மேடம் பட்டா பரம்பரை: அப்டேட் குமாரு

மேடம் பட்டா பரம்பரை: அப்டேட் குமாரு

எங்க பாத்தாலும் சார்பட்டா பரம்பரை பத்தியே பேச்சா இருக்கேனு ஒரு ஃப்ரண்டுக்கிட்ட, சார்பட்டா பரம்பரை பாத்துட்டியானு கேட்டேன். அட ஏம்ப்பா நாங்கல்லாம் மேடம் பட்டா பரம்பரைப்பா, அவங்க சொன்னாதான் படமே பார்ப்பேனு சொல்லிட்டார். அட பாவமே படத்தைப் பாத்த சிலரும் இப்படிதான் சொல்றாங்க

நீங்க அப்டேட் பாருங்க

மயக்குநன்

பெகாசஸ்' உளவு குறித்து வரும் 28-ம் தேதி சசிதரூர் தலைமையிலான நிலைக்குழு ஆலோசனை!- செய்தி.

நிலைக்குழு ஆலோசனையை உளவு பார்க்காம இருந்தா சரிதான்..!

தர்மஅடி தர்மலிங்கம்

வட மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு வளர்ந்துள்ளது;நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இருக்காதா பின்ன... தமிழ்நாடு முழுக்க வடநாட்டவர்கள் தான வேலை பார்க்குறாங்க.

amudu

கரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. -மா.சுப்பிரமணியன்.

இந்த விசயத்தில் தான் "ஒன்றிய அரசின்" கருத்தோடு "ஒன்றிய அரசாக" இருக்கீங்க.

கோழியின் கிறுக்கல்!!

இத்தனை பேர் பேசுவதை ஒட்டுக் கேட்டீங்களே,

அதுல ஒருத்தர் கஷ்டம் கூடவா உங்க மூளைக்கு ஏறவில்லை!?

மயக்குநன்

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்!- மம்தா பானர்ஜி.

கொரோனா 3-வது அலையைச் சமாளிக்கிறதைவிட கஷ்டமான டாஸ்க்கை சொல்றாங்களே..?!

ச ப் பா ணி

பேங்க்குல யாராவது பேந்த பேந்த முழிச்சா

அவங்ககிட்ட பேனா இல்லைனு அர்த்தம்

தர்மஅடி தர்மலிங்கம்

“தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்வு” - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இந்த விஷயம் ஒன்றிய அரசுக்கு தெரிஞ்சா இதுக்கொரு வரியை போட்டிடுவாங்களே.

ஜோக்கர் ஃபீனிக்ஸ்

என் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது ~ கமல்ஹாசன்

சரி கேட்கட்டுமே யாருக்கு புரியபோவுது

ச ப் பா ணி

அறிவுரை இனிக்கும்போது, சர்க்கரை நோயாளியாகியிருப்போம்

சாய் பெருமாள்

நீங்க என்ன பரம்பரை..?

லாக்டவுண் பரம்பரை. எங்கள் பரம்பரை தான் முதமுதலா லாக்டவுணை சந்திச்சது.

மயக்குநன்

மு.க.ஸ்டாலின் அரசு சிறப்பாகச் செயல்படுகிறது!- எஸ்.வி.சேகர்.

நிலுவையில இருக்கிற வழக்கெல்லாம் கண் முன்னால வந்துட்டுப் போகுது போல..?!

சரவணன். ℳ

ஜம்முவில் வெடிபொருளுடன் சுற்றிய ட்ரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்!

எலக்சன் வர்ற நேரம் வந்தா போதும், தீவிரவாதிகள் உடனே அவங்க வேலையை காட்ட ஆரம்பிச்சுடறாங்க...

லாக் ஆஃப்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

வெள்ளி 23 ஜூலை 2021