மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

ஜி.வி.பிரகாஷூக்கு ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கால் ஏற்பட்ட சோகம் !

ஜி.வி.பிரகாஷூக்கு ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கால் ஏற்பட்ட சோகம் !

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி, கென், தீஜே, நரேன் நடித்து வெளியான படம் `அசுரன்'. இந்தப் படம் 2019ல் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்.

அசுரன் படத்துக்கு கிடைத்த வரவேற்பினால், தெலுங்கில் அசுரனை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டினார் நடிகர் வெங்கடேஷ். அதன்படி, இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் வாங்கியது. அதன்படி, வெங்கடேஷ் நடிக்க `நாரப்பா' எனும் பெயரில் படமும் வெளியாகிவிட்டது. நேரடியாக பிரைம் ஓடிடியில் கடந்த ஜூலை 20ஆம் தேதி படம் வெளியானது.

இப்படத்தில் வெங்கடேஷ் உடன் ப்ரியாமணி, கார்த்திக் ரத்னம், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பொதுவாக, ஒரு படத்தினை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் போது படத்துக்கு வேறு இசையமைப்பாளர் இசையமைக்கக் கூடும். அப்படி, அசுரன் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் அட்டகாசமான இசையைக் கொடுத்திருந்தார். இந்நிலையில், தெலுங்கு வெர்ஷனான ‘நாரப்பா’ படத்துக்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

நாரப்பா படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில், அசுரனில் இடம்பெற்ற மெயின் பிஜிஎம், இரண்டு பாடல்களை அப்படியே தெலுங்கில் பயன்படுத்தியிருக்கிறார் மணிசர்மா.

தமிழைப் போலவே, தெலுங்கிலும் படம் கடத்தும் உணர்வு நன்றாகவே பிரதிபலிக்கிறது. இருப்பினும், ஜி.வி.பிரகாஷூக்கு மட்டும் கொஞ்சம் வருத்தம் என்கிறார்கள்.

ஜி.வி அசுரனுக்கு போட்ட இசையைப் படத்தில் பயன்படுத்தியிருக்கும் வேளையில், அதற்கான அனுமதியோ, தொகையோ எதுவும் தரவில்லை என்று வருத்தப்படுகிறதாம் ஜி.வி.தரப்பு.

இந்தப் பக்கம் விசாரித்தால், அசுரனின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. அவரே ‘நாரப்பா’ படத்தையும் தயாரித்துவருகிறார். அவரிடமே அசுரனுக்கான ஆடியோ ரைட்ஸூம் இருக்கிறது. அதனால், எந்த அனுமதியும் பெற வேண்டியதில்லை. அதனால், இதுகுறித்த எந்த யோசனையுமின்றி, நாரப்பா படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் இருக்கிறது படக்குழு.

-தீரன்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

3 நிமிட வாசிப்பு

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

வெள்ளி 23 ஜூலை 2021