மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

ஷங்கர் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இல்லாதது ஏன்?

ஷங்கர்  படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இல்லாதது ஏன்?

ஷங்கர் கைவசம் மூன்று படங்கள் இருக்கிறது, ஒன்று, கமல்ஹாசன் நடிக்க உருவாகிவரும் ‘இந்தியன் 2’. லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இப்படம் கொஞ்சம் சிக்கலில் இருக்கிறது. விரைவிலேயே, நீதிமன்ற தீர்ப்பினைப் பொறுத்து படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அடுத்தப் படத்தின் பணிகளைத் துவங்கிவிட்டார் ஷங்கர். தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த தில்ராஜூ தயாரிப்பில் ராம்சரண் நடிக்க PAN இந்தியா திரைப்படத்தை இயக்க இருக்கிறார் ஷங்கர். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதற்குப் பின்னால், மிகப்பெரிய காரணமே ஒளிந்திருக்கிறது.

பொதுவாக, ஷங்கர் படங்களில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இடம்பெற்றிருப்பார். ஷங்கரின் முதல் படமான ஜென்டில் மேன் படத்தில் துவங்கி கடைசிப் படமான ரஜினி நடித்த 2.O வரையிலும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை பின் தொடர்ந்தது.

ஷங்கர் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணையாதது அந்நியன் மற்றும் நண்பன் படங்களில் மட்டும் தான். அந்த இரண்டிலும் ஹாரிஸ் ஜெயராஜ் பணியாற்றினார்.

இந்நிலையில், லைகாவின் அழுத்தத்தின் பெயரில் இந்தியன் 2வில் அனிருத் ஒப்பந்தமானார். இந்தியளவில் எதிர்பார்க்கப்படுவதாக ராம் சரண் நடிக்கப் போகும் படம் இருக்கப் போகிறது. அதனால், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான் இல்லையென்றாலும், அனிருத் இடம்பெறுவார் என்றும் ஒரு தகவல் சொல்லப்பட்டது.

அனிருத் இடம்பெறாததுக்கு ஒரு காரணம் இருக்கிறது. என்னவென்றால், ஷங்கரின் ஒர்க்கிங் ஸ்டைலும், அனிருத் ஒர்க்கிங் ஸ்டைலும் ஒர்க் அவுட் ஆகவில்லை என்கிறார்கள். சொன்ன நேரத்தில் பட பணிகள் நடக்க வேண்டுமென நினைப்பவர் ஷங்கர். ஆனால், அனிருத் கொஞ்சம் தள்ளிப் போட்டே பாடல்களைக் கொடுப்பவர். அதனால், இந்தியன் 2வுக்கே கொஞ்சம் உரசல் இருந்திருக்கிறது. அதனால், அனிருத் வேண்டாமென ஷங்கரே கூட சொல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை நிராகரித்தது ராம்சரணின் தந்தை சிரஞ்சீவி என்று சொல்லப்படுகிறது. சிரஞ்சீவி நடித்து வெளியான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்துக்கு முதலில் இசையமைக்க இருந்தது ஏ.ஆர்.ரஹ்மான் தான். அதன்பிறகு, ஒரு சில காரணங்களால் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த சம்பவம் சிரஞ்சீவிக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியது. அதை மனதில் வைத்து, ராம்சரண் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டாமென்றிருக்கிறார். இதுதான் காரணம். அதன்பின்னரே, தமன் ஒப்பந்தமானார்.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 23 ஜூலை 2021