மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

சார்பட்டா தாக்கம் ; ஆர்யாவின் இரண்டு புதுப் படங்கள் காட்டும் அவசரம் !

சார்பட்டா தாக்கம் ; ஆர்யாவின் இரண்டு புதுப் படங்கள் காட்டும் அவசரம் !

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து பிரைம் ஓடிடியில் வெளியாகியிருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’ . குத்துச்சண்டை போட்டிகளை மையமாகக் கொண்டு உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக இப்படம் உருவாகியிருக்கிறது.

எமர்ஜென்ஸி காலக்கட்டம், அதற்குள் திமுக - அதிமுக அரசியல் , சாதிய அரசியல், தலித் பிரச்னை என பல விஷயங்களை ஸ்போர்ட்ஸ் டிராமாக்குள் பேசி அசத்தியிருக்கிறார் பா.ரஞ்சித்.

ரங்கன் வாத்தியாராக பசுபதி, கபிலனாக ஆர்யா, வேம்புலியாக ஜான் கொக்கன், கெவின் டேடியாக ஜான்விஜய், மாரியம்மாவாக துஷாரா என படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, ஆர்யாவின் டிரான்ஸ்பர்மேஷன், படத்துக்காக போட்டிருக்கும் உழைப்பு என பெரியளவில் ஆர்யாவுக்கு பாராட்டு குவிந்துவருகிறது. இந்நிலையில், ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் படங்களும் ரிலீஸூக்கு அவசரம் காட்டிவருகிறது.

ஆர்யா நடிப்பில் டெடி & சார்பட்டா பரம்பரை என இரண்டுமே பெரியளவில் ஹிட்டாகியிருப்பதால், இந்த புகழைப் பயன்படுத்தி ஆர்யா நடித்திருக்கும் படங்களை அடுத்தடுத்து இறக்கிவிட தயாரிப்பாளர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர்.

முதலில், ஆர்யா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘அரண்மனை 3’ . இந்தப் படத்தில் பேயாக ஆர்யா நடித்திருக்கிறார். ஆண்ட்ரியா, ராஷிகண்ணா லீட் ரோல்களில் நடித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு முன்பே படம் தயாராகிவிட்ட நிலையில், சென்சாருக்கு படத்தை அனுப்பும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் சுந்தர்.சி.

அடுத்த மாதம் திரையரங்க அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முதலாவதாக ‘அரண்மனை 3’ இறக்கிவிட யோசிக்கிறார்களாம்.

அதுபோல, விஷாலுடன் ஆர்யா நடித்திருக்கும் படம் ‘எனிமி’. ஆனந்த் ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படத்தையும் சூட்டோடு சூட்டாக இறக்கிவிட திட்டமாம். முன்னதாக, படத்தின் டீஸரை நாளை ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

-ஆதினி

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

3 நிமிட வாசிப்பு

‘நாய் சேகர்’ முதல் பார்வை!

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

வெள்ளி 23 ஜூலை 2021