மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

ராஜமெளலியின் அடுத்தப் படம்!

ராஜமெளலியின் அடுத்தப் படம்!

பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ராஜா காலத்துக் கதையில் வெரைட்டிக் காட்டியிருந்த படம் பாகுபலி. இரண்டு பாகங்களாக வெளியான இப்படைப்புகள் மூலம் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறினார் ராஜமெளலி.

தற்பொழுது ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தை இயக்கிவருகிறார் ராஜமெளலி. அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்ட பலரும் நடித்துவருகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

ஆர்.ஆர்.ஆர்.படமானது சுமார் 400 கோடியில் தயாராகி வருகிறது. அதோடு, தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வரும் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ராஜமெளலியின் அடுத்தப் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ராஜமெளலி அடுத்ததாகத் தெலுங்கின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை இயக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. அந்தத் தகவலும் கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகி வருகிறது.

ராஜமெளலியின் தந்தையும், கதையாசிரியருமான விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தகவல் ஒன்றைக் கூறினார். அதில், ராஜமெளலியின் அடுத்தப் படத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார் என்றும், ஆப்ரிக்க காடுகளில் நடிக்கும் கதையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பொதுவாக, ராஜமெளலி ஒரு படத்தில் கவனம் செலுத்தத் துவங்கினால் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது எடுத்துக் கொள்வார். குறிப்பாக, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கே ஒரு வருடம் பணியாற்றுகிறார். தற்பொழுது, ஆர்.ஆர்.ஆர். படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்தப் படம் வெளியாகி ஒரு சில மாதங்கள் ஓய்வுக்குப் பின்னர், மகேஷ்பாபு படத்தின் கதையைத் துவங்குவார் என்று சொல்லப்படுகிறது.

தற்பொழுது, பரசுராம் இயக்கத்தில் சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடித்துவருகிறார் மகேஷ்பாபு. இதுவரை வெளியான ஸ்பைடர், பாரத் ஆனே நேனு, மகரிஷி, சர்லேறு நீக்கெவ்வறு என தொடர்ச்சியாகப் படங்கள் பெரிதாக ஹிட்டாகவில்லை. மகேஷ்பாபுவின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது ‘சர்க்காரு வாரி பாட்டா’. இந்தப் படத்துக்குப் பிறகு, த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார்.

தற்பொழுது, சர்க்காரு வாரி பாட்டாவுக்குப் பிறகு ராஜமெளலியா, த்ரிவிக்ரமா என்று விசாரித்தால், முதலில் த்ரிவிக்ரம் படத்தை முடிக்க இருக்கிறாராம். ஏனெனில், ராஜமெளலி படத்துக்குள் சென்றால் நீண்ட இடைவெளிக்கு வேறு எந்தப் படமும் நடிக்க முடியாதென்பதால், முதலில் த்ரிவிக்ரம் படத்தை முடிக்கிறார். அதற்குள், ராஜமெளலி கதை, படப்பிடிப்பு திட்டங்களை உறுதி செய்ததும், ராஜமெளலி படத்துக்குச் செல்வார் என்று சொல்லப்படுகிறது.

-ஆதினி

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

வெள்ளி 23 ஜூலை 2021